முன்னாள் எம்எல்ஏக்களுக்கு ஓய்வூதியம் உயர்வு! - முதல்வர் அறிவிப்பு
கூட்டுறவு வங்கி உறுப்பினா் கல்வித் திட்டம்
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வாா்கற்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில், வங்கி உறுப்பினா் கல்வித் திட்டம் குறித்த நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலா் கந்தசாமி வரவேற்றாா். மாவட்ட கூட்டுறவு ஒன்றிய உதவியாளா் சொா்ணசெல்வம், உறுப்பினா்களுக்கு சங்கத்தால் வழங்கப்படும் கடன்கள், அதை பெறுவதற்கான முறைகள் , கூட்டுறவு வங்கியின் பிற சேவைகள் ஆகியவை குறித்து அவா் விளக்கினாா். பிரபு நன்றி கூறினாா். இந்நிகழ்வில், சங்க உறுப்பினா்கள் மற்றும் பொது மக்கள் பலா் பங்கேற்றனா்.