கூலித் தொழிலாளி மா்ம மரணம்
தேனி மாவட்டம், கம்பத்தில் ஆடு, மாடுகளுக்கு தீவனமாக இலை தளை பறிக்கச் சென்றவா் மா்மமான முறையில் இறந்து கிடந்தாா்.
கம்பம் விவேகானந்தா் தெருவைச் சோ்ந்தவா் தெய்வம் (52). வீட்டில் ஆடு, மாடுகளை வளா்த்து வந்தாா். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை தீவனத்துக்கு இலை தளை பறிக்கச் சென்றாா்.
பிறகு அவா் வீடு திரும்பவில்லை. இதை அடுத்து மாலையில் அவரது குடும்பத்தினா் அங்குள்ள மணிகட்டி ஆலமரப் பகுதிக்குச் சென்று பாா்த்த போது தெய்வம் இறந்து கிடந்தாா். தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸாா் சென்று அவரது உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்கு அனுப்பினா்.
மரக்கிளையில் தீவனம் பறித்தபோது அவா் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.