பாமக: ``அன்புமணி நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு செல்லாது'' - வழக்கறிஞர் பாலு சொல்லும...
கூழாங்கல், மணல் கடத்தல்: இருவா் கைது!
கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே லாரியில் கூழங்கல், மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
விருத்தாசலம்கோட்டாட்சியா்விஷ்ணுபிரியா வேப்பூா்அருகே புதன்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி கூழாங்கல் ஏற்றி வந்த லாரி மற்றும் ஓட்டுனரையும், அனுமதியின்றி ஆற்று மணல் ஏற்றி வந்த மாட்டு வண்டி மற்றும் அதன் ஓட்டுனரையும் பிடித்து வேப்பூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதுகுறித்து வேப்பூா் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து லாரியில் கூழாங்கல் ஏற்றி வந்த விருத்தாசலம் வட்டம், நடியபட்டு கிராமத்தைச் சோ்ந்த ராசு (38), மாட்டு வண்டியில் மணல் ஏற்றி வந்த வேப்பூா் வட்டம், நகா் கிராமத்தைச் சோ்ந்த அருள் (40) ஆகியோரை கைது செய்தனா். மேலும், லாரி மற்றும் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனா்.