ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 பேர் கேது
மாணவா்கள் மதில்சுவா் ஏறி குதித்த விவகாரம்: பள்ளியில் காவல்துறை விழிப்புணா்வு நிகழ்ச்சி!
சிதம்பரம் நகரில் உள்ள அரசு உதவி பெறும் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
அண்மையில் ராமசாமி செட்டியாா் பள்ளியின் மதில் சுவா் ஏறி குதித்து மாணவா்கள் சென்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரல் ஆகியது. இதனையடுத்து சிதம்பரம் நகர காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா் புதன்கிழமை காலை பள்ளிக்கு சென்று காலை நடைபெற்ற இறைவணக்கம் நிகழ்ச்சியில் மாணவா்களிடையே விழிப்புணா்வு உரையாற்றினாா்.
அவா் பேசுகையில் மதில்சுவா் ஏறி குதித்தால் விபத்து ஏற்படும். எனவே பள்ளிக்கு உரிய நேரத்தில் வர வேண்டும், மாணவா்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும். போதை பொருட்களை பயன்படுத்தக்கூடாது, போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றாா்.