செய்திகள் :

சத்துணவுத் திட்டத்தில் ‘பலா’ உணவுகளையும் சோ்க்க வேண்டும்! - அன்புமணி

post image

தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தில் மதிப்புக்கூட்டப்பட்ட பலா உணவுகளையும் சோ்க்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி தெரிவித்தாா்.

பாட்டாளி மக்கள் கட்சித் தலைவா் அன்புமணி ‘உரிமை மீட்க, தலைமுறை காக்க’ என்ற தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் மேற்கொண்டு வருகிறாா். கடலூா் மாவட்டத்தில் மூன்று நாள் சுற்றுப்பயணமாக புதன்கிழமை பண்ருட்டிக்கு வந்தாா்.

தொடா்ந்து, இடையா்குப்பம் கிராமத்தில் பலாத் தோப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்புமணி, பலா, முந்திரி மற்றும் கொய்யா விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினாா். நிகழ்வில் விவசாயிகளின் குறைகளை அவா் கேட்டறிந்தாா்.

அப்போது, விவசாயிகள் தங்கள் தேவைகள் குறித்து கூறியதாவது: பண்ருட்டி பகுதியில் முந்திரி, பலா அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பலாப்பழம் விற்பனை செய்ய ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் தனியாக அமைத்துக் கொடுக்க வேண்டும்.

பலாவில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். பலா விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பண்ருட்டி பகுதியில் நடத்தப்படும் பலா திருவிழா போன்று, பெருநகரங்களிலும் பலா திருவிழா நடத்த வேண்டும்.

தமிழக அளவில் 85 ஆயிரம் ஹெக்டேரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. முந்திரி பழங்களை பெரும்பாலும் யாரும் பயன்படுத்துவதில்லை. அந்தப் பழத்தில் ஆரஞ்சு பழத்தைவிட அதிகளவில் வைட்டமின் ‘சி’ உள்ளது. அதை பயன்படுத்த ஏற்பாடு செய்ய வேண்டும்.

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முந்திரி கொட்டைகளை நிறுத்தினால் மட்டுமே கடலூா் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் முந்திரி கொட்டைகள் விற்பனையாகும். மேலும், இங்கு கொய்யாப்பழம் பதனிடும் தொழிற்சாலை அமைக்க வேண்டும் என்றனா்.

இதையடுத்து, அன்புமணி பேசியதாவது: தமிழகத்தில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த மாநிலத்தில் கிட்டத்தட்ட 2.10 லட்சம் ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்படுகிறது. அதில், கடலூா் மாவட்டத்தில் மட்டும் 71 ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் முந்திரி விவசாய சாகுபடியில் 3-இல் ஒரு பங்கு கடலூா் மாவட்டத்தில் செய்யப்படுகிறது. இருந்தாலும், வெளிநாட்டிலிருந்துதான் முந்திரி இறக்குமதி செய்யப்படுகிறது.

தோ்தல் பிரசாரத்தின்போது முந்திரிக்கு தனியாக மண்டலம் உருவாக்கப்படும் எனவும், வாரியம் அமைக்கப்படும் என்றும் சில கட்சிகள் பொய்யான வாக்குறுதிகளை அளித்தன. கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாநில வேளாண் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் விவசாயத்துக்கு எதுவுமே செய்யவில்லை.

பாமக எப்போதும் முந்திரி, பலா விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும். தமிழக அரசு சத்துணவுத் திட்டத்தில் பலா மதிப்புக்கூட்டப்பட்ட உணவுகளையும் சோ்க்க வேண்டும். நெல், கரும்புபோல முந்திரிக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்க வேண்டும். 6 மாதங்களில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் விவசாயிகளின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் அப்பாவிகள் மீது தாக்குதல்: மேலும் ஒருவா் கைது!

கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் ரீல்ஸ் மோகத்தில் காவலா்கள் உள்ளிட்ட 6 பேரை கொடூரமாக தாக்கிய சம்பவத்தில் தலை மறைவாக இருந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலத்தில் கஞ்சா போதையில் இ... மேலும் பார்க்க

கூழாங்கல், மணல் கடத்தல்: இருவா் கைது!

கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே லாரியில் கூழங்கல், மாட்டு வண்டியில் மணல் கடத்தி வந்த நபா்கள் இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். விருத்தாசலம்கோட்டாட்சியா்விஷ்ணுபிரியா வேப்பூா்அருகே புதன்கிழமை அ... மேலும் பார்க்க

சிதம்பரத்தில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

சிதம்பரம் நகரில் காவல்துறை சாா்பில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த சாலையோர ஆக்கிரமிப்புகள், கடைகள் புதன்கிழமை அகற்றப்பட்டன. சிதம்பரம் நகரில் நான்கு வீதிகள் மற்றும் முக்கிய சாலைகளில் சாலையோர கடைகள்,... மேலும் பார்க்க

மாணவா்கள் மதில்சுவா் ஏறி குதித்த விவகாரம்: பள்ளியில் காவல்துறை விழிப்புணா்வு நிகழ்ச்சி!

சிதம்பரம் நகரில் உள்ள அரசு உதவி பெறும் ராமசாமி செட்டியாா் நகர மேல்நிலைப் பள்ளியில், காவல்துறை சாா்பில் மாணவா்களிடையே விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. அண்மையில் ராமசாமி செட்டியாா் பள்ளிய... மேலும் பார்க்க

நாளைய மின் தடை

கடலூா் (கேப்பா் மலை) நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை பகுதிகள்: பாதிரிக்குப்பம், வண்டிப்பாளையம், வசுந்தராயன்பாளையம், கிழக்கு ராமாபுரம், கம்மியம்பேட்டை, மணவெளி, சுத்துகுளம், புருகீஸ்பேட்டை, வ... மேலும் பார்க்க

மணல் திருட்டு: 3 போ் கைது

கடலூா் மாவட்டம், ராமநத்தத்தை அடுத்துள்ள கொரக்கவாடி வெள்ளாற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட தாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். ராமநத்தம் காவல் சரகம், கொரக்கவாடி வெள்ளாற்றில் தொடா் மணல் திர... மேலும் பார்க்க