செய்திகள் :

'கூவம் போல் ஆகிவிட்டது மதிமுக.. நீங்கள் தோற்றுவிட்டீர்கள் தலைவரே..' - வெளுத்துவாங்கிய மல்லை சத்யா

post image

கூட்டத்தில் திருவேங்கடம் பேசுகையில், "வாக்கி டாக்கியில் ஐந்து நிமிடத்திற்கு ஒருமுறை 'ஓவர், ஓவர்' என்று சொல்வதைப் போல, 'துரை வைகோ வாழ்க' எனச் சொல்ல வேண்டும் என நினைக்கிறார்கள். வாரிசு அரசியல் செய்வதற்கு ம.தி.மு.க-வுக்குத் தகுதி இல்லை. ராமதாஸ் தனது மகனைவிடக் கட்சிதான் முக்கியம் என்கிறார். ஆனால் வைகோ தனது மகனுக்குப் பெரும்பான்மையான ஆதரவு இருக்கிறது என்கிறார். வெள்ளை நிறக் காகம் பறக்கிறது என்றால், 'ஆமாம்' என்று சொல்வோரை நம்பாதீர்கள்; உங்கள் கண்ணில் கோளாறு இருக்கிறது என்று சொல்வோரை நம்புங்கள். இல்லையென்றால் கட்சி அழிந்துபோகும்," என்று எச்சரித்தார்.

மல்லை சத்யா

தொடர்ந்து பேசிய இளவழகன், "யாரிடமும் மல்லை சத்யாவைப் பேசக்கூடாது என்கிறீர்கள். வைகோ நீங்கள் என்ன மன்னரா.. உங்கள் மகன் என்ன இளவரசனா.. தனி மனித சுதந்திரத்தை ஏன் பறிக்கிறீர்கள்.. மல்லை சத்யாவை மாத்தையாவுடன் ஒப்பிடுகிறீர்கள். அப்போது நீங்கள் என்ன பிரபாகரனா.. அவர் நாட்டுக்காகத் தனது இரண்டு மகன்களையும் பலி கொடுத்தார். நீங்களோ மகனுக்குப் பட்டம் சூட்டினீர்கள். பிறகு எப்படி நீங்கள் பிரபாகரனாக முடியும்.. நீங்கள் செல்வது பெரியார் வழியா.. அண்ணா வழியா.. அண்ணா தனக்குப் பின்னால் 20 தம்பிகளை நிறுத்தினார். நீங்கள் எத்தனை தம்பிகளை நிறுத்தினீர்கள்.." எனக் கொதித்தார்.

அடுத்து மைக் பிடித்த கங்கா துரை, "மல்லை சத்யாவுக்குப் பதில் சொல்ல முடியாது என துரை சொல்கிறார். ஏன் சொல்ல முடியாது.. என் சகோதரன் 32 ஆண்டுக்காலம் உழைத்திருக்கிறார். பதில் சொல்லியே ஆக வேண்டும். நாங்கள் கட்டிக் காப்பாற்றி வைத்திருந்த இயக்கத்தை புறவாசல் வழியாக வந்த உனக்குக் கொடுக்க வேண்டுமா... எங்களைச் சக்கையாகப் புளித்து போட்டுட்டு போய்டுவ... நாங்கள் வாயப் பொத்திக்கிட்டு போகணுமா... மல்லை சத்யா மீது பல வழக்குகள் இருக்கிறது.  உன் பிள்ளை என்ன கஷ்டப்பட்டார்... எந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டார்.. கட்சிக்கு வந்ததும் பொறுப்பு கொடுப்பீர்கள். அவர் சீனியர்களை மதிக்காமல் பேசுவார். நீங்கள் வாயைப் பொத்திக்கொண்டு சும்மா இருப்பீர்களா.. அதைத் தடுத்திருக்க வேண்டாமா.. உங்களோடு இருந்ததற்கு வெட்கப்படுகிறோம். நீங்களெல்லாம் ஒரு தலைவரா?" எனக் கொதித்தார்.

மல்லை சத்யா

வல்லம் கோபி பேசுகையில், "துரையை இப்படி ஒருநாள் உண்ணாவிரதம் இருக்கச் சொல்லுங்கள் பார்க்கலாம். நான் மீசையை எடுத்துவிட்டு நடந்துவருகிறேன். கார்ப்பரேட் கம்பெனியில் செய்தது இங்கே செல்லாது. எம்.பி பதவியை கீழே வைத்துவிட்டு வா.. செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்ட அலுவலகம் எங்களது எனச் சொல்லிவிட்டு அந்த பக்கம் வந்தால்.. என்ன நடக்கும் என நான் சொல்ல மாட்டேன்" என வெடித்தார்.

இறுதியாகப் பேசிய துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, "கூவம் நதியின் நிலைக்கு ம.தி.மு.க சென்றுகொண்டிருக்கிறது. தலைவர் வைகோவை நான் இதயத்தில் வைத்துப் பூஜிக்கின்றவன். வாழ்வதென்றாலும், வீழ்வதென்றாலும் தலைவருக்கத்தான். அவர் ஒருவருக்காகத்தான் வீழ்வேன் என்று சொன்னது தற்போது வீணாகப்போய்விட்டது. தவிடு தின்னும் ராஜாவுக்கு முறம் பிடித்தால்தான் நீ மந்திரியாக முடியும் என ஆலோசனை வழங்கியபோது முடியாது என்ற காரணத்தினால் நான் இன்று வீதியில் நின்று கேட்கின்றேன், தலைவரே நான் துரோகியா?.

மல்லை சத்யா

இங்கிருக்கும் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் எனக்காக வரவில்லை உங்களிடம் நீதி கேட்டு வந்திருக்கிறார்கள். கடந்த ஒருவாரமாக சத்யா பின்னால் செல்ல வேண்டாம் என இங்கிருக்கும் ஒவ்வொருவரிடமும் சொல்லிக்கொண்டு வந்தீர்கள். தோழர்களிடம் பேசுவதற்கு துரையிடம் அனுமதி கேட்டீர்களா தலைவரே.. அவர் நீங்கள் ஏன் தொண்டர்களிடம் பேசுகிறீர்கள் எனக் கோபித்துக்கொண்டிருப்பாரே.. நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை உங்களை எப்போது வேண்டுமானாலும் நாங்கள் தொடர்பு கொள்ள முடியும். நீங்களும் அப்படித்தான் தொடர்பு கொண்டீர்கள். ஆனால் இப்போது தொண்டர்களிடம் பேச வேண்டும் என்றால் துரையிடம் அனுமதி பெற வேண்டும். எனவே அனுமதி பெற்றீர்களா?.

மாத்தையாவுக்கு கடைசியில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அந்த கதி எனக்கும் வர வேண்டும் என விரும்பினீர்களா தலைவரே?. ஆனால் நீங்கள் அப்படிப்பட்ட நபர் இல்லை. மகன் பாசம் உங்கள் கண்களை மறைத்துக்கொண்டிருக்கிறது. மகன் அரசியல்படுத்தப்படவில்லை. ஜனநாயகப் பண்பை வளர்த்துக்கொள்ளவில்லை. எனவேதான் 32 ஆண்டுகால எனது அரசியல் வாழ்க்கையைக் களங்கப்படுத்துகிற வேலையை அவர் செய்து வந்தார். நான்கு ஆண்டுகளில் நிறைய அவமானப்படுத்தப்பட்டு இருக்கின்றோம். ஏப்ரலில்தான் நேரடியாக என் மீது குற்றச்சாட்டைச் சொன்னார், துரை. பிறகு காரில் ஏறி ஓடிவிட்டார். மன்னார்குடியில் படத்திறப்பு விழாவுக்குச் சென்றவர் மறைந்த தலைவர் குறித்துப் பேசவில்லை.

மல்லை சத்யா

'என் தந்தை வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்துக்கொண்டிருக்கிறார்' என்றார். அயோக்கியர்களை வைத்து கட்சி நடத்துகிறார் என்கிறார். காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தபோது திருச்சியில் செய்தியாளர்கள் துரையிடம் கேள்வியெழுப்புகிறார்கள். அதற்கு, 'உட்கட்சி பயங்கரவாதி குறித்து நான் பேச வரவில்லை' என்கிறார். யாரைப் பயங்கரவாதி எனச் சொல்கிறார், துரை. 32 வழக்குகளைச் சந்தித்திருக்கிறேன். இப்படி துரை வைகோவால் பட்டினி போராட்டம் நடத்தி ஆயிரக்கணக்கான மக்களைத் திரட்ட முடியுமா?. ம.தி.மு.க பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கும் துர்ப்பாக்கிய நிலைக்குச் சென்றுவிட்டது என வருத்தப்படுகிறோம்.

தன் மகனுக்குக் கட்சியில் முதன்மைச் செயலாளர், நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளைக் கொடுத்து நீங்கள் தந்தையாக வெற்றிபெற்றிருக்கலாம். ஆனால் அரசியலில் தோற்றுவிட்டீர்கள். அரசியலில் தலைவர் என்கிற அந்தஸ்திலிருந்தும் நீங்கள் விலக்கிவைக்கப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய சுயநலத்துக்காகக் கட்சியின் ஆளுமைகளையெல்லாம் ஒவ்வொருவராக இழந்து வந்தீர்கள். ஒருபோதும் உங்களுடைய அரசியல் இனி தமிழகத்தில் வெற்றிபெறாது. எங்களுடைய வயிற்றெரிச்சல் உங்களுடைய அரசியல் சதுரங்கத்தை தூள் தூளாக்கும்" என்றார் கண்ணீருடன்.

Rahul Gandhi: "உண்மையான இந்தியர் இப்படிப் பேசமாட்டார்" - ராகுல் காந்திக்கு நீதிமன்றம் கண்டனம்

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பாரத் ஜடோ யாத்திரையின்போது சீனாவிடம் இந்தியா ராணுவம், லடாக்கில் 2000 ச.கி.மீ பரப்பளவு நிலத்தை விட்டுக்கொடுத்ததாகப் பேசியதை உச்ச நீதிமன்றம் கடுமையாகக் கண... மேலும் பார்க்க

தஞ்சாவூர்: வெளிநடப்பு, வாட்டர் பாட்டில் வீச்சு, தர்ணா - மாநகராட்சி கூட்டத்தில் ரகளை; என்ன நடந்தது?

தஞ்சாவூர் மாநகராட்சி மாமன்றக் கூட்டம் மேயர் சண்.இராமநாதன் தலைமையில் நடந்தது. இதில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி, ஆணையர் கண்ணன் மற்றும் கவுன்ன்சிலர்கள் கலந்து கொண்டனர்.கூட்டம் தொடங்கியதும், 12வது வார்டு த... மேலும் பார்க்க

Durai Vaiko: பிரதமர் மோடியுடன் அவரச சந்திப்பு; காரணம் இதுதான் துரை வைகோ விளக்கம்

டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடியை மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ இன்று சந்தித்துப் பேசியிருக்கிறார். ரஷ்ய இராணுவத்தில் வலுக்கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ள, தமிழ்நாட்டைச் சேர்ந்த மருத்துவ ம... மேலும் பார்க்க

பாஜக: "கீழடி, மேலடியை விட்டுவிட்டு மக்களுக்கு ஸ்டாலின் நன்மை செய்ய வேண்டும்" - நயினார் நாகேந்திரன்

விருதுநகர் தனியார் மண்டபத்தில் பாஜகவின் பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழக இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி... மேலும் பார்க்க

திமுக: "விவரம் தெரிந்தவர்களிடம் கேட்டுப் பேசுவது, அன்புமணிக்கு நல்லது" - அமைச்சர் துரைமுருகன் பதிலடி

பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கடந்த ஜூலை 25-ம் தேதியிலிருந்து `தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம்’ என்கிற தலைப்பில், நடைப்பயணம் மேற்கொண்டு மக்களைச் சந்தித்து வருகிறார்.நேற்று (ஆகஸ்ட் 3) இரவு வேலூரில் ... மேலும் பார்க்க