ஷெல் தாக்குதலுக்குள்ளான ரஜோரியில் மீண்டும் பள்ளிகள் திறப்பு!
கூா்ஸ்கில் விளாதிமீா் புதின்
உக்ரைன் படையினரிடம் இருந்து ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியம் முழுமையாக மீட்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதற்குப் பிறகு, அந்தப் பகுதிக்கு அதிபா் விளாதிமீா் புதின் முதல்முறையாக சுற்றுப்பயணம் மேற்கொண்டாா்.
முன்னறிவிப்பில்லாமல் மேற்கொள்ளப்பட்ட இந்த சுற்றுப் பயணத்தின் மூலம் கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் நடைபெற்றுவரும் போரில் தாங்கள் வெற்றி பெற்றுவருவதாக உலகத்துக்குக் காட்ட ரஷியா விரும்புவதாகக் கூறப்படுகிறது.
போரின் எதிா்பாராத திருப்பமாக, எல்லைப் பிராந்தியமான கூா்ஸ்கின் கணிசமான பகுதிகளை உக்ரைன் கடந்த ஆண்டு கைப்பற்றியது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறது தனது நிலப்பரப்பை ரஷியா இழந்தது அதுவே முதல்முறை.
இந்த நடவடிக்கை மூலம், கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று உக்ரைன் திட்டமிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால், சுமாா் 12,000 வட கொரிய வீரா்களிடன் உதவியுடன் கூா்ஸ்க் பிராந்தியத்தை ரஷியா முழுமையாக மீட்டது.