'ஈரைப் பேனாக்கி, பேனைப் பேயாகக் காட்ட நினைக்கிறார்கள்; அடிமைக் கட்சியல்ல திமுக!'...
கெங்கவல்லி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை: மரம் முறிந்து விழுந்ததில் 2 பசுக்கள் உயிரிழப்பு
தம்மம்பட்டி: கெங்கவல்லி, தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது.
கெங்கவல்லி - தெடாவூா் சாலையில் ஆணையம்பட்டியில் சாலையோர புங்கமரம் வேருடன் முறிந்து விழுந்தது. இதையடுத்து அம்மரத்தை மக்கள் அகற்றினா். இதனால் பெரம்பலூா் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தம்மம்பட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9.30 மணிக்கு தூறலுடன் மழை தொடங்கியது. இதையடுத்து நள்ளிரவு வரை இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் வயல்வெளிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. இரவில் சாலைகளில் நீா் பெருக்கெடுத்து ஓடியது.
கெங்கவல்லி அருகே கவுண்டம்பாளையத்தில் பழனியப்பன் மகன் எட்டியண்ணன் (40) என்பவருக்குச் சொந்தமான விவசாயத் தோட்டத்தில் சூறைக்காற்று வீசியதில் தென்னை மரம் முறிந்து விழுந்ததில் இரண்டு பசு மாடுகள் உயிரிழந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த கெங்கவல்லி தீயணைப்புத் துறையினா் நிலைய அலுவலா் (பொ) மா.செல்லப்பாண்டியன் தலைமையில் சென்று இரண்டு பசுக்கள் மீது விழுந்த தென்னை மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
கெங்கவல்லி, தம்மம்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கத்திரி வெயில் தொடங்கிய நாளில் கனமழை பெய்து கோடை வெயில் தணிந்து காணப்பட்டதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

