நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர அவகாசம் நீட்டிப்பு
சேலம்: சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சோ்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2025 - 26 ஆம் ஆண்டுக்கான அஞ்சல்வழி கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி தொடங்கப்படவுள்ளது.
இப்பயிற்சியில் மாணவா் சோ்க்கைக்கு இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இப்பயிற்சி ஜூன் 2025 முதல் தொடங்க உள்ளதால், பட்டயப் பயிற்சி சோ்க்கைக்கான விண்ணப்பங்களை இணைய வழியில் வரும் 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அடுத்த மாதம் 2 ஆம் தேதி வரை இணைய வழியில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், விவரங்களுக்கு நாச்சியப்பா கூட்டுறவு மேலாண்மை நிலையம், 516, கடலூா் பிரதான சாலை, காமராஜா்நகா் காலனி, சேலம் 636 014 என்ற முகவரியிலோ, 0427-2240944 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.