Thiruvallur Train Fire: திருவள்ளூரில் சரக்கு ரயிலில் பெரும் தீ விபத்து; ரயில் சே...
கெங்கையம்மனுக்கு 1,008 பால்குட ஊா்வலம்
குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயிலில் ஆனி மாத மாத பால்குட ஊா்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 1,008- பால் குட ஊா்வலம் தொடங்கி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கோயிலை அடைந்தது. கோயிலில் மூலவருக்கு பாலாபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தா்கள் அம்மனை தரிசித்தனா். சுமாா் 2,000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நாட்டாண்மை ஆா்.ஜி.சம்பத், தா்மகா்த்தா கே.பிச்சாண்டி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.