செய்திகள் :

கேரளத்தில் கனமழை: 4 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை!

post image

கேரளத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், நான்கு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது.

தென் வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதியானது வலுவடைந்து சென்னை-இடங்கைக்கு இடையே கரையைக் கடக்கவுள்ள நிலையில் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்து வருகின்றது.

இந்த நிலையில் கேரள மாநிலத்தில் இன்று காலை முதல் கனமழை பெய்துவரும் நிலையில் கொல்லம், எர்ணாகுளம், இடுக்கி மற்றும் திருச்சூர் ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் எட்டு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு எச்சரிக்கை என்றால் மிக அதிக மழை (6 செமீ முதல் 20 செமீ வரையும், மஞ்சள் எச்சரிக்கை என்பது 6 முதல் 11 செமீ வரை அதிக மழைப்பொழிவைக் குறிக்கிறது.

அடுத்த ஐந்து நாள்களுக்கு மாநிலத்தின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி, வியாழக்கிழமை மாநிலத்தின் சில பகுதிகளில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு: ஐடி பங்குகள் மட்டும் உயர்வு!

இந்திய பங்குச் சந்தை வணிகம் இன்று (டிச. 12) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ் 236 புள்ளிகள் சரிவுடனும் நிஃப்டி 2600 புள்ளிகளுக்கு கீழும் சரிந்தது.பங்குச் சந்தையில் ஐடி துறை தவிர மற்ற துறைகள் அனைத்தும் 2%... மேலும் பார்க்க

மணிப்பூரைச் சொன்னால் கரீனா கபூரை சந்திக்கிறார் மோடி: காங்கிரஸ்

பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்லாமல் கரீனா கபூர் குடும்பத்தினரைச் சந்தித்தை காங்கிரஸ் தலைவர் விமர்சித்துள்ளார்.மறைந்த பழம்பெரும் பாலிவுட் நடிகர் ராஜ் கபூரின் திரைப்பயணத்தைக் கொண்டாடும் விதமாக நாளை (டி... மேலும் பார்க்க

மணிப்பூர் நெருக்கடிக்கு நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் முயற்சி: பைரன் சிங்

மணிப்பூர் மாநிலத்தில் நிலவும் நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வு காணக் கால அவகாசம் எடுக்கலாம் என்று அந்த மாநில முதல்வர் என்.பைரன் சிங் தெரிவித்துள்ளார். நூபி லானின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் பேசிய அவர், ம... மேலும் பார்க்க

கபூர் குடும்பத்தினருடன் மோடி; பாதிக்கப்பட்டவர்களுடன் ராகுல்! - விமரிசிக்கும் காங்கிரஸ்!

மறைந்த பிரபல பாலிவுட் நடிகர் ராஜ்கபூரின் குடும்பத்தினரை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசியது குறித்து காங்கிரஸ் கட்சியினர் விமரிசித்து வருகின்றனர். பிரதமர் மோடி - கபூர் குடும்பத்தினர் சந்திப்பு!க... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல்: அமைச்சரவை ஒப்புதல்!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.2029 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக இந்த முறை அமல்படுத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா... மேலும் பார்க்க

'நீதித்துறை வலுவாக இருந்தால் மோடியும் யோகியும் சிறையில் இருப்பார்கள்' - புரி சங்கராச்சாரியார்

பிரதமர் மோடி, யோகி ஆதித்யநாத் பற்றி சுவாமி நிச்சலானந்த சரஸ்வதி கூறியதற்கு பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி ஆதரவு தெரிவித்து பகிர்ந்துள்ளார். முன்னதாக, இந்தியாவில் வலுவான நீதித் துறை இருந்தால் பிரத... மேலும் பார்க்க