செய்திகள் :

கேரளா: "4 ஆம் வகுப்பு படிக்கிறப்ப அடிச்சான்" - 50 ஆண்டுகளாகத் தீராத வகுப்புத் தோழர்களின் சண்டை!

post image

வகுப்புத் தோழர்கள்

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் வி.ஜே. பாபு (62). இவர் 50 ஆண்டுகளுக்கு முன்பு பாலால் கிராம பஞ்சாயத்தில் உள்ள மாலோமின் நாடக்கல்லு உதவி பெறும் பள்ளியில் 4 வகுப்பு படித்திருக்கிறார்.

இவருடன் படித்த வகுப்புத் தோழர்கள் மாலோத்து பாலகிருஷ்ணன், மேத்யூ வலியப்ளாக்கல். இவர்கள் மூவரும் ஒரே பகுதியில் விவசாயம் செய்துவருகின்றனர்.

வகுப்புத் தோழர்கள் என்பதால், நட்பையும் பேணிவந்தனர். இந்த நிலையில், நேற்று மாலோமில் உள்ள ஜானகிராம் ஹோட்டல் முன் மூவரும் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.

முதியவர்கள்
முதியவர்கள்

மருத்துவமனையில் அனுமதி

அப்போது, ​​பழைய கதைகளை நினைவுகூர்ந்தனர். அப்போது வி.ஜே. பாபுவுக்கும் மாலோத்து பாலகிருஷ்ணனுக்கு இடையே 4-ம் வகுப்பு படித்தபோது ஏற்பட்ட சண்டை தொடர்பாக வாக்குவாதம் நடந்திருக்கிறது.

அப்போது, மாலோத்து பாலகிருஷ்ணன் வி.ஜே. பாபுவைக் கீழே தள்ளினார், மேத்யூ வலியப்ளாக்கல் வி.ஜே பாபுவின் முகத்திலும் அவரது உடலிலும் கல்லால் அடித்திருக்கிறார். இதில், வி.ஜே பாபுவின் பற்களில் சில உடைந்திருக்கின்றன. அதைத் தொடர்ந்து வி.ஜே பாபு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பாரதிய நியாய சன்ஹிதாவின் கீழ்

இது தொடர்பாகப் பேசிய காவல்துறை அதிகாரி, ``சம்பவத்தின் போது பற்கள் உடைந்தால், அந்தச் செயல் ஜாமீனில் வெளிவர முடியாத குற்றமாக மாறும். மருத்துவர்களிடம் விசாரணை நடத்துகிறோம்.

குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்) பிரிவுகள் 126 (2), 118 (1), மற்றும் 3 (5) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

முதியவர்
முதியவர்

வி.ஜே. பாபு வாக்குமூலம்

சம்பவத்திற்குப் பிறகு வி.ஜே பாபு அளித்த வாக்குமூலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பாலகிருஷ்ணன் 4-ம் வகுப்பில் ஒரு முறை தன்னை அடித்ததாகவும், இப்போது இரண்டாம் முறை அடித்திருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இந்தச் சண்டையை நீதிமன்றம் கொண்டுசெல்ல விரும்பவில்லை எனத் தெரிவித்திருக்கும் அவர், நஷ்ட ஈடாக ரூ1.5 லட்சம் பெற்றுத் தரும்படி தெரிவித்திருக்கிறார்" என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://bit.ly/3PaAEiY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3PaAEiY

மத்தியப் பிரதேசம்: ``ட-வடிவ பாலம்; வாகனங்கள் எப்படி செல்லும்?'' - எதிர்க்கட்சிகள் காட்டம்

மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ஐஷ்பாக் ஸ்டேடியத்திற்கு அருகில் ஒரு பாலம் கட்டப்பட்டு வருகிறது. மார்ச் 2023-ல் கட்டுமானப் பணிகள் தொடங்கிய நிலையில், 648 மீட்டர் நீளம், 8.5 மீட்டர் அகலம் கொண்ட இந்... மேலும் பார்க்க

Royal Enfield: `பஞ்சாப் டு இங்கிலாந்து' பைக் லவ்வரின் செயலால் வைரலாகும் வீடியோ!

உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றின் மீது காதல் இருக்கும். சிலருக்கு ஒரு நபர்மீது, சிலருக்கு புத்தகங்கள் மீது, சிலருக்கு திரைப்படம் மீது, சிலருக்கு அவர்களுக்குரிய பொருள்கள் மீது என எல்லோருக்கும் எதோ ஒன... மேலும் பார்க்க

வலைபாயுதே..!

twitter.com/Chithradevi_91அதிகம் ஆங்கிலம் பேசப்படும் இடங்கள், பாரீன் நாடுகள் மற்றும் டாஸ்மாக் பார்கள்.twitter.com/sasitwittzபெண்கள் ஓட்டும் இருசக்கர வாகனங்களுக்கு பிரேக் ஷூ அவ்வளவு சீக்கிரம் தேய்ந்துப... மேலும் பார்க்க

``Ac இல்லாத வீட்டில் வாழ முடியாது'' - திருமணத்தை நிறுத்திய மணமகள் போலீசில் புகார்.. நடந்தது என்ன?

உத்திர பிரதேசம் மாநிலம் ஆக்ராவில் தனது அறையில் ஏர் கண்டிஷனிங் இல்லை என கூறி மணமகள் ஒருவர் திருமணத்தை நிறுத்தியுள்ளார். மணமகன் குடும்பத்தினர் திருமணத்திற்கு ஏற்பாடு செய்த இடத்தில் தனது அறையில் ஏர்கண்டி... மேலும் பார்க்க

Chenab Bridge: "தேவையில்லாமல் என்னை பிரபலமாக்காதீர்கள்" - முக்கிய இன்ஜினீயர் மாதவி லதா பதிவு!

ஜம்மு காஷ்மீரில் உலகிலேயே உயரமான ரயில்வே பாலமான செனாப் ரயில் பாலத்தைக் கடந்த வெள்ளி அன்று திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த திட்டத்தில் முக்கிய பங்களிப்பாளராக இருக்கும் பேராசிரியர் ஜி மாதவி... மேலும் பார்க்க

அமெரிக்காவில் கைதான இன்ஸ்டா பிரபலம் Khaby Lame; "விசா விதிமுறை மீறில்" - அதிகாரிகள் சொல்வது என்ன?

கபே லேம் கைதுஉலகளவில் சமூக ஊடகத்தின் மூலம் வைரலான கபே லேம் ஜூன் 6ஆம் தேதி அமெரிக்க குடியேற்றம் மற்றும் சுங்க அமலாக்கப் பிரிவால் (ICE) கைது செய்யப்பட்டார்.இந்தச் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இ... மேலும் பார்க்க