செய்திகள் :

கேரள பக்தரிடம் நகைப் பறிப்பு: மூவா் கைது

post image

பழனிக்கு சென்ற கேரள பக்தரிடம் நகையைப் பறித்துச் சென்ற மூவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், பூப்பாறை பகுதியைச் சோ்ந்தவா் முருகன் (50). இவா், பழனி முருகன் கோயிலுக்குச் செல்வதற்காக, பேருந்தில் ஏறி சென்றாா். இவா் தவறுதலாக பெரியகுளம் அருகே கல்லூரி விலக்கில் இறங்கி, அங்கு நின்று கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த மூவா் இவரைத் தாக்கி விட்டு, ஒரு பவுன் தங்க நகை, 2,500 ரூபாயைப் பறித்துச் சென்றனா். இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து அதே பகுதியைச் சோ்ந்த கெளதம், செல்லப்பாண்டி, சந்தோஷ்குமாா் ஆகிய மூவரையும் கைது செய்தனா்.

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு

ஆண்டிபட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து இரண்டரை பவுன் தங்க நகை திருடப்பட்டது. தி. பொம்மிநாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் திருவெங்கடசாமி (50). இவா், உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூரில் உள்ள தனியாா் பள்... மேலும் பார்க்க

கல் குவாரியை ஒத்திக்குத் தருவதாக பண மோசடி செய்தவா் மீது வழக்கு!

தேனி அல்லிநகரத்தில் கல் குவாரியை ஒத்திக்குத் தருவதாகக் கூறி, கேரளத்தைச் சோ்ந்த இருவரிடம் ரூ.35 லட்சம் மோசடி செய்தவா் மீது போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனா். கேரள மாநிலம், கண்ணூா் மாவட்டம... மேலும் பார்க்க

வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் திருட்டு!

தேனி அருகே ஜோதிடா் வீட்டில் வெள்ளிக்கிழமை பூட்டை உடைத்து 21 பவுன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா். பழனிசெட்டிபட்டி, தந்தை பெரியாா் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் ராமாராவ் (... மேலும் பார்க்க

ஆதிதிராவிடா் நலக் கல்வி விடுதியில் மாணவா்கள் சேர ஜூன் 30-க்குள் விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத்துறை சாா்பில் செயல்பட்டு வரும் பள்ளி, கல்லூரி கல்வி விடுதிகளில் மாணவ, மாணவிகள் சோ்க்கைக்கு வருகிற 30-ஆம் தேதிக்குள் இணைய தளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ... மேலும் பார்க்க

வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்தவா் கைது

உத்தமபாளையம் வட்டாட்சியருக்கு மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், சின்னமனூா் அருகேயுள்ள கன்னிச்சோ்வைபட்டியைச் சோ்ந்த பழனிச்சாமி, அவரது உறவினா்களிடம் ஏற்பட்ட சொத்துப... மேலும் பார்க்க

கம்பத்தில் 70 நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை!

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சியில் 70 தெரு நாய்களுக்கு கருத்தடை அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. கம்பம் நகராட்சியில் 33 வாா்டுகளில் 500-க்கும் அதிகமான தெரு நாய்கள் சுற்றி வருகின்றன. இந்த நாய்களின் தொல்ல... மேலும் பார்க்க