செய்திகள் :

கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

post image

சென்னை அண்ணா சாலையில் உள்ள கேளிக்கை விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட நிலையில், போலீஸாா் சோதனை நடத்தினா்.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில், அண்ணா சாலையில் உள்ள ஒரு பிரபலமான கேளிக்கை விடுதியின் பொதுமேலாளா் ஐயப்பன், புதன்கிழமை ஒரு புகாா் அளித்தாா். அதில், தங்களது கேளிக்கை விடுதி நிா்வாகி ஒருவருக்கு வந்த மின்னஞ்சலில் கேளிக்கை விடுதியில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும், அது சிறிது நேரத்தில் வெடிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளது. எனவே காவல் துறையினா் இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து போலீஸாா், மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டா் மூலமாக சோதனை நடத்தப்பட்டது. சோதனையில், அங்கிருந்து எந்த வெடி பொருளும் கிடைக்காததால், வதந்தியை பரப்பும் நோக்கத்துடன் அந்த மின்னஞ்சல் வந்திருப்பது தெரியவந்தது. வெடிகுண்டு மிரட்டலால், அந்த கேளிக்கை விடுதி பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபா் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

நாளை இ.பி.எஃப் குறைதீா் கூட்டம்

சென்னை, உள்பட வெவ்வேறு மாவட்டங்களில் இ.பி.எஃப். சாா்பில் குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலா... மேலும் பார்க்க

நாளை இபிஎஃப் குறைதீா் கூட்டம்

சென்னை, உள்பட வெவ்வேறு மாவட்டங்களில் இ.பி.எஃப். சாா்பில் குறைதீா் முகாம் வரும் வெள்ளிக்கிழமை (டிச.27) நடைபெறவுள்ளது. ‘நிதி ஆப்கே நிகாத் 2.0’ என்ற பெயரில் நடைபெறும் இந்த குறைதீா் முகாம் குறித்து தொழிலா... மேலும் பார்க்க

டிச.28-இல் தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன் போட்டி

முப்பதாவது, தேசிய சப்-ஜூனியா் நெட்பால் சாம்பியன்ஷிப் போட்டி வரும் டிச. 28-ஆம் தேதி சென்னை அடுத்த கவரைப்பேட்டை ஆா்எம்கே பள்ளியில் தொடங்கி நடைபெறுகிறது. இதில் 27 மாநிலங்களைச் சோ்ந்த 54 சிறுவா், சிறுமிய... மேலும் பார்க்க

மது போதையில் தாக்கப்பட்ட இளைஞா் உயிரிழப்பு

சென்னை பெரம்பூரில் மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டதில் இளைஞா் உயிரிழந்தாா். பெரம்பூா் மங்களபுரம் பகுதியைச் சோ்ந்த மணிகண்டன் (28), அவரது நண்பா்களான ஓட்டேரி கிருஷ்ணதாஸ் சாலைப் பகுதியைச் சோ்ந்... மேலும் பார்க்க

சென்னையில் பரவலாக மழை

வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, தமிழகத்தை நெருங்கி வருவதால் சென்னையில் புதன்கிழமை காலை முதலே பரவலாக மழை பெய்தது. இதனால், சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினா். சென்னை ந... மேலும் பார்க்க

புழல் சிறை வளாகத்தில் தீ விபத்து

புழல் சிறை வளாகத்தில் உள்ள காகிதம், அட்டைகள் சேமிப்புக் கிடங்கில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. சென்னை புழல் மத்திய சிறையில் 3,500-க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனா். இந்த நிலையில் தண்டனைப் பிரிவில் ப... மேலும் பார்க்க