செய்திகள் :

‘கேஷ்லெஸ் சமூகம்’ ஆக ஸ்வீடன் - பணம் இருந்தும் வாடும் ‘டிஜிட்டல் ஏழை’களைத் தெரியுமா?

post image
உலகம் முழுவதுமே கிரெடிட், டெபிட் கார்டுகள், பணப் பரிவர்த்தனை ஆப்கள் வியாபித்துக் கிடக்கின்றன. ஆனாலும், ஸ்வீடன் அளவுக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை வேறு எந்த நாட்டிலும் அதிகமில்லை எனலாம். ஸ்வீடன் வங்கியின் புள்ளிவிவரத்தின்படி கடந்த 2007-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இப்போது பணத்தாள் புழக்கம் பாதியாக குறைந்துவிட்டது.

ஸ்வீடன் நாட்டின் சட்டத்தின்படி வணிக நிறுவனங்களோ, வங்கிகளோ, பிற பொதுச் சேவை அமைப்புகளோ பணப் பரிவர்த்தனையை ரொக்கமாக செய்வதா அல்லது டிஜிட்டல் முறையில் மேற்கொள்வதா என முடிவு செய்து கொள்ளும் உரிமை வெகுவாகக் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் பொது போக்குவரத்து வாகனங்கள், கடைகள் உள்ளிட்ட நிறைய சேவைகள் வழங்குநர்கள் பணத்தாள்களைப் பெறுவதில்லை. அதேபோல் நிறைய இடங்களில் பணத்தை செலுத்துவதற்கான கவுன்ட்டர்களே இல்லை.

UPI பண பரிவர்த்தனைகள்

பணத்திலிருந்து டிஜிட்டல் பரிவர்த்தனைக்கான இந்த மாற்றம் 2012-ல் தான் ஸ்வீடனில் வேகம் பெற்றது எனலாம். ஏனெனில் அப்போதுதான் ஸ்வீடிஷ் பேமென்ட் ஆப்பான ஸ்விஷ் (Swish) அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இப்போது ஸ்வீடனில் 80 சதவீத மக்கள் ஸ்விஷ் ஆப் மூலம் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைதான் செய்கின்றனர்.

ஸ்வீட்ஸ்களுக்கு (ஸ்வீடன் மக்கள்) கேஷ்லெஸ் பொருளாதாரம் என்பது வசதியானதாகவும், துரிதமான பரிவர்த்தனைக்கானதாகவும் இருந்தாலும் கூட, வங்கிக் கணக்கு இல்லாவிட்டால், தொழில்நுட்ப வசதியை பயன்படுத்தத் தெரியாவிட்டாலும் சிரமப்பட வேண்டியிருக்கும். இதனால் இன்னமும் பணத்தைப் பயன்படுத்துவோருக்கு இது மிகப் பெரிய சவாலாக இருக்கிறது.

இது தொடர்பான சமீபத்திய ஆய்வுகள், ஸ்வீடனின் கேஷ் பயன்படுத்தும் சமூகத்தினர் படும்பாட்டை விளக்குவதாக அமைந்துள்ளது. வங்கிக் கணக்கு இல்லை, போதிய அளவு பணம் இல்லை, டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் வசதியின்மை ஆகியனவற்றால் ஒரு குறிப்பிட்ட அளவிலான மக்கள் கேஷ்லெஸ் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கின்றனர்.

ஸ்வீடனில் எத்தனை பேர் இன்னமும் ரொக்கப் பணப் பரிவர்த்தனையைப் பயன்படுத்துகின்றனர் என்ற சரியான புள்ளிவிவரம் இல்லை. ஆனாலும் அவர்கள் படும் பாடு கவனிக்கத்தக்கது.

சமூகத்தில் ஏஐ-யின் தாக்கம்

கேஷ்லெஸ் பரிவர்த்தனைக்கு வாய்ப்பில்லாத சிலரிடம் பேசியபோது அவர்கள் தங்களின் துயரங்களைப் பகிர்ந்தனர். அவர்களில் சிலர் மிக மிகக் குறைவான வருமானம் பெறுவராக உள்ளனர். அவர்களுடைய சிக்கல்கள் கலாச்சார ரீதியாக நடைமுறை சிக்கல்களுக்கு உட்பட்டதாக இருக்கிறது. அவர்கள் சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாக உணர்கின்றனர். மதிப்பு, மரியாதையற்றவர்களாக உணர்கின்றனர். அன்றாட வாழ்க்கையிலேயே சிக்கல்களை சந்திக்கின்றனர்.

கேஷ் பப்பிள்ஸ்..!

ஸ்வீடனில் உங்களால் ரொக்கத்தை மட்டுமே செலவழிக்கத் தெரிகிறது, முடிகிறது என்றால் நீங்கள் கேஷ் பப்பிள்ஸ் “cash bubbles” சமூகத்தினராகிவிடுவீர்கள். ரொக்கப் பணம் என்பது ஏதோ உள்ளூர் செலாவணி போல் அங்கே இருக்கிறது. அதற்கும் பெரும்பான்மை பொருளாதரத்துக்கும் தொடர்பற்று கிடக்கிறது.

கேஷ் பப்பிள்ஸில் நீங்கள் ஒருவராக இருந்தால், உங்களால் சில நேரங்களில் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க இயலாது. அதற்குக் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை கொண்ட யாரையாவது உதவிக்கு எதிர்பார்க்க வேண்டியிருக்கும். இதற்காகவே நிறைய தன்னார்வலர்கள் ஆங்காங்கே இருக்கின்றனர்.

உக்ரைன் நாட்டைச் சேர்ந்த அகதி ஒருவர் இது குறித்து கூறுகையில், “வங்கிக் கணக்கை என்னால் தொடங்க இயலாது. அதனால் எனக்கு டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கான வாய்ப்பு இல்லை. அப்படி இருக்கையில் உடல் உபாதை ஏற்பட்டால் உள்ளூர் கிளினிக் செல்லக் கூட முடியாமல் தவிக்கிறேன்” என்றார்.

வீடற்ற மக்கள் சிலர் கார்களில் உறங்குவது உண்டு. ஆனால், அவர்களால் பார்க்கிங் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். இவர்களின் தவிப்பை பணமாக்கும் கும்பலும் உருவாகியுள்ளது. அந்தக் கும்பலைச் சேர்ந்தவர்கள் கேஷ்லெஸ் பரிவர்த்தனை செய்ய முடியாதவர்களிடம் அவர்கள் பெற விரும்பும் சேவைக்கு ஒன்றுக்கு பலமடங்கு பணத்தை பிடுங்கிக் கொள்கின்றனர். டிஜிட்டல் ஏழைகளாக இருப்பது மிகப் பெரிய துன்பம்.

டிஜிட்டல் ஏழைகள்...

டிஜிட்டல் ஏழைகளாக நவீன யுகத்தின் புறக்கணிக்கப்பட்டவர்களாக உள்ள ஸ்வீடனின் கேஷ் பப்பிள்ஸ் மிகுந்த வேதனை, அவமானத்தை சந்திப்பதாகச் சொல்கின்றனர். மேலும் அவர்கள் கோபம், விரக்தி கொண்டுள்ளனர். அன்றாடம் சந்திக்கும் அளவற்ற அவமானங்களை அவர்களை வேதனையின் உச்சத்தில் வைத்துள்ளது.

வயதான பெண் ஒருவர் அவரது பேத்தியின் பிறந்தநாளில் தான் சேர்த்துவைத்திருந்த பணத்தை கொண்டு சிறு பரிசுப் பொருளை வாங்க முற்பட்டுள்ளார். ஆனால் அவர் பணப் பரிவர்த்தனை செய்ய இயலாததால் அந்தப் பொருளை வாங்க முடியாமல் போகிறது. அந்தத் தருணத்தை அந்த மூதாட்டி வர்ணிக்கையில், “நான் அப்போது ஒரு திருடியைப் போல் உணர்ந்தேன்” எனக் கூறுகிறார்.

ஸ்வீடனின் கேஷ்லெஸ் மாறுமை

ஸ்வீட்ஸ் மக்கள் தொழில்நுட்பத்தை வாஞ்சையோடு, பெரிய விமர்சனங்களின்றி மிக முன்னதாகவே ஏற்றுக் கொண்டவர்கள். அப்போதே வர்த்தக உலக ஆய்வாளர்கள் 2023 மார்ச்சில் ஸ்வீடனில் பணப்பரிவர்த்தனை ஒழிந்து எல்லாம் டிஜிட்டல் மயமாகும் எனக் கணித்திருந்தனர். அது இப்போது கிட்டத்தட்ட நிறைவேறும் தருணத்தில் உள்ளது.

கடந்த 150 ஆண்டுகளில், தொழில்நுட்ப புத்தாக்கங்கள், தொழில்முனைவு போக்கு ஆகியன நாட்டை வறுமையில் இருந்து மீட்டு ஐரோப்பாவின் வளமான நாடுகளில் ஒன்றாக மாற்றியுள்ளது.

ஸ்வீடனின் ‘கேஷ்லெஸ் சமூகம்’ உருவாக வங்கிகள் மிக முக்கியக் காரணம். ஸ்விஷ் ஆப் மற்றும் எலக்ட்ரானிக் ஐடியை வங்கிகள் அறிமுகம் செய்தன. இந்த எலக்ட்ரானிக் ஐடி மூலமாகவே மருத்துவம், வேலையின்மை பலன்களைப் பெறுவதற்கான சேவைகளைப் பெற முடியும் என்ற நிலையை வங்கிகள் உருவாக்கியது. ஆகையால் வங்கி வாடிக்கையாளராக இல்லாவிட்டல் பொதுச் சேவைகளை அனுபவிக்க இயலாது.

கொரோனா பெருந்தொற்றின்போது பணத்தை பயன்படுத்துவதன் மூலம் நோய்ப் பரவும் என்ற அச்சத்தால் கேஷ்லெஸ் பரிவர்த்தனை பயன்பாடு அதிகரித்தது.

இவையெல்லாம் சேர்ந்து ஸ்வீடன் சமூகத்தை டிஜிட்டல் பணம் தான் நல்லது, ரொக்கப் பணம் அழுக்கானது, குற்றத் தொடர்புடையது என்பன போல் ஒரு மாயையை உருவாக்கிவிட்டது. அதனாலேயே இன்னமும் ரொக்கப் பணத்தை நம்பியிருக்கும் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஸ்வீடனில் இன்னும் சில ஆண்டுகளில் முற்றிலும் ரொக்கப் பணம் பயன்பாடு வழக்கொழிந்துவிடும். ஆனால் வறுமையினால் டிஜிட்டம் பரிவர்த்தனை செய்ய முடியாதவர்களையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும். மனநலம் பாதிக்கப்பட்டோரும் கூட இந்த கேஷ் பப்பிள்ஸ் குழுமத்தில் உள்ளடங்குவர்.

இது வெறும் சமூகப் பிரச்னை மட்டுமல்ல, சமூகத்தில் ஒரு சாராரின் உணர்வுப் போராட்டம். ஒரு பிரிவினர் தனித்துவிடப்பட்டவர்களாக உணர்கின்றனர். இதை ஒருவர், “வறுமையை விட மனிதர்கள் மாயமாகிவிட்டதாக உணர்கிறேன். நான் எந்திரனைப் போல் இருக்கிறேன். இங்கே கிளிக் செய்யவும், அங்கே கிளிக் செய்யவும் என்ற பதாகைகள், டிஜிட்டைசேஷன் மக்களை தனிமைப்படுத்திவிட்டது” என்றார்.

இந்தியாவில் நம்மில் பலரும் ஒரு தேநீருக்கு கூட ரூ.12-ஐ டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வதை பழக்கமாக்கிக் கொண்டோம். இனி, அவ்வாறு செய்யும்போது ஸ்வீடன் விளைவுகளை யோசித்துப் பார்த்தால் நல்லது.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

Trump: ``டிரம்ப் முடிவுகளால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி பாதிக்கும்" -எச்சரிக்கும் உலக வங்கி

அமெரிக்காவைச் சேர்ந்த மீடியா நிறுவனம் ஒன்று, டிரம்ப் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்பது தொடர்பாக சர்வே ஒன்றை எடுத்துள்ளது. அதில் 'டிரம்ப் பதவியேற்றப்பிறகு, மளிகை சாமான்கள், ரியல் எஸ்டேட், மருத்துவம... மேலும் பார்க்க

``டாலரின் மதிப்பு உயர்வு பற்றி எனக்கு கவலை இல்லை" - ரகுராம் ராஜன் சொல்லும் காரணம்

2013-ம் ஆண்டிலிருந்து 2016-ம் ஆண்டு வரை இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தவர் ரகுராம் ராஜன். '2024- 2025 நிதியாண்டில், இந்தியா ஜி.டி.பி 6.4 சதவிகிதமாக இருக்கலாம். இது கடந்த நான்கு ஆண்டுகளில் மிக... மேலும் பார்க்க

2010, 2017, 2024-ல் நடக்காதது, 2025-ல் நடக்குமா? -புதிய வருமான வரிச் சட்டம் அறிமுகமா?! |New Tax Bill

வரும் பிப்ரவரி 1-ம் தேதி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை வெளியிடப்போகிறார். இதையொட்டி, பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் மாதம் தொடங்க உள்ளது. இந்தப் பட்ஜெட் கூட்டத்தொடரில், புதிய நேரட... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: தி.மலை நெடுஞ்சாலையின் அவலநிலையைச் சுட்டிக்காட்டிய விகடன்; நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்

திருப்பத்தூர் மாவட்டம், வெங்கலாபுரம் அருகே உள்ள திருவண்ணாமலை நெடுஞ்சாலையையொட்டி அமைந்திருக்கிறது இந்த இடம். செங்கம், சிங்காரப்பேட்டை, திருவண்ணாமலை செல்வதற்காக இந்த வழியை வாகன ஓட்டிகள் பயன்படுத்தி வருக... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல்: களத்தில் நாம் தமிழர் கட்சி - யார் இந்த வேட்பாளர் சீதாலட்சுமி?

ஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் அண்மையில் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து, அந்தத் தொகுதிக்கு வரும் பிப்ரவரி 5-ஆம் தேதி இடைத் தேர்தல் அறிவிக்கப... மேலும் பார்க்க