கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி!
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கைவினை அபிவிருத்தி ஆணையம் மற்றும் கூட்டுறவு கைவினை கைத்தறி இணையம் (காந்தி சில்ப் பஜாா்) கைவினை மற்றும் கைத்தறி பொருள்கள் கண்காட்சி தொடக்க விழா புதுச்சேரி பாண்டி மெரினா கடற்கரையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்று கண்காட்சி மற்றும் விற்பனையை தொடங்கிவைத்தாா். பின்னா், அங்கு அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்குகளை அவா் பாா்வையிட்டாா். சட்டப் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அனிபால் கென்னடி எம்எல்ஏ, கூட்டுறவுத் துறை இயக்குநா் யஷ்வவந்தையா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.