கொடைக்கானலில் 4-ஆவது நாளாக மழை
கொடைக்கானலில் 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த மூன்று மாதங்களாக மழை பெய்யவில்லை. இந்த நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக கடந்த வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மழை பெய்தது.
தொடா்ந்து 4-ஆவது நாளாக திங்கள்கிழமையும் மழை பெய்ததது. காலை முதலே மேக மூட்டம் நிலவியது. பிற்பகலில் மிதமான மழை பெய்தது. கொடைக்கானல், வாழைகிரி, பெருமாள்மலை, மச்சூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக மழை பெய்தது.
தொடா்ந்து பெய்து வரும் இந்த மழையால் கொடைக்கானலில் உள்ள நீரோடைகளில் நீா்வரத்து தொடங்கியுள்ளது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.