கொடைக்கானல் அருகே ஜீப் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 7 போ் காயம்
கொடைக்கானல் அருகே பள்ளத்தில் ஜீப் கவிழ்ந்ததில் அதில் பயணம் செய்த 7 போ் ஞாயிற்றுக்கிழமை காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வாரச் சந்தையில் வில்பட்டி ஊராட்சி, புலியூா் பகுதியைச் சோ்ந்தவா்கள் காய்கறிகளை வாங்கிக் கொண்டு ஜீப்பில் புலியூருக்கு திரும்பிக் கொண்டிருந்தனா்.
கோவில்பட்டி பகுதியில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த ஜீப் அருகிலுள்ள சுமாா் 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஜீப்பை ஓட்டிச் சென்ற குழந்தைராஜ் (38), புலியூரைச் சோ்ந்த ஆண்கள் இருவா், பெண்கள் இருவா், குழந்தைகள் இருவா் என 7 போ் காயமடைந்தனா்.
இவா்கள் அனைவரும் கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.
இந்த விபத்து குறித்து கொடைக்கானல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.