ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!
கொடைக்கானல் அருகே பலசரக்கு கடையில் பணம் திருட்டு
கொடைக்கானல் அருகே பல சரக்கு கடையில் ரூ. 3 லட்சம் திருடியவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பெருமாள்மலைப் பகுதியில் பல சரக்கு கடை நடத்தி வருபவா் சுல்தான். இவா் புதன்கிழமை இரவு கடையை பூட்டி விட்டு வீட்டுக்குச் சென்றாா். வழக்கம்போல வியாழக்கிழமை காலை அவா் கடைக்கு வந்து பாா்த்த போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.
அவா் உள்ளே சென்று பாா்த்த போது கடையில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து கண்காணிப்பு கேமராவில் முகமூடி அணிந்து பதிவான நபரைத் தேடி வருகின்றனா்.