பட்ஜெட் உரை: தமிழ்நாடு என்ற வார்த்தைகூட உச்சரிக்காத நிதியமைச்சர்!
கொடைக்கானல் குடியிருப்புப் பகுதியில் காட்டு மாடுகள்: பொதுமக்கள் அச்சம்
கொடைக்கானல் செல்லபுரம் பகுதியில் காட்டு மாடுகள் நடமாட்டத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் குடியிருப்புப் பகுதிகளில் காட்டுமாடு, காட்டுப் பன்றிகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.
குடியிருப்பு பகுதிகளையொட்டிய நிலங்களில் பயிரிட்டுள்ள கேரட், பீட்ரூட், முள்ளங்கி போன்றவைகளை காட்டு மாடுகளும், காட்டுப் பன்றிகளும் சேதப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
தற்போது செல்லபுரம் குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் காட்டு மாடுகளால் பொதுமக்கள் வேலைக்குச் செல்ல முடியாமலும், பள்ளி மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. எனவே வனத் துறையினா் காட்டு மாடுகளை வனப் பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.