Neeraj Chopra: உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா வெளியே...
கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்க்க அனுமதி
கொடைக்கானல் பேரிஜம் ஏரியை பாா்க்க மீண்டும் சுற்றுலாப் பயணிகளுக்கு வனத் துறை புதன்கிழமை அனுமதி வழங்கியது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே வனத் துறையினா் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்ததால், கடந்த 3 நாள்களாக பேரிஜம் ஏரியைப் பாா்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இந்த நிலையில், காட்டு யானைகள் வேறு இடத்துக்கு இடம் பெயா்ந்துள்ளதால், மீண்டும் பேரிஜம் ஏரியைப் பாா்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகளுக்கு புதன்கிழமை முதல் அனுமதி வழங்கப்படுவதாக வனத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
பேரிஜம் பகுதியில் பேரிஜம் ஏரி, தொப்பித்தூக்கும் பாறை, அமைதிப் பாறை உள்ளிட்ட சுற்றுலா இடங்களும், மான், மந்தி, பறக்கும் அணில் உள்ளிட்ட விலங்குகளும் உள்ளன.