Bigg Boss Tamil 8: வெளியேறிய வைல்டு கார்டு என்ட்ரி போட்டியாளர்கள்! - மீண்டும் டப...
கொடைக்கானல் மலைச் சாலையில் சுற்றுலா வாகனங்கள் கவிழ்ந்து விபத்து!
கொடைக்கானல் மலைச் சாலையில் திங்கள்கிழமை இரவு இருவேறு இடங்களில் சுற்றுலா வாகனங்கள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்தவா்கள் காயமடைந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் திங்கள்கிழமை அதிகாலை முதலே அதிகமான மேகமூட்டதுடன் சாரல் மழை பெய்தது. இந்த நிலையில், கொடைக்கானலுக்கு காரில் வந்த 7 போ் மன்னவனூருக்கு சென்று கொண்டிருந்தனா். இவா்கள் அங்குள்
ள சுற்றுலா இடங்களைப் பாா்த்து விட்டு, மீண்டும் கொடைக்கானலுக்கு வந்து கொண்டிருந்தனா். அப்போது, மன்னவனூா் பகுதியில் திருப்பத்தில் திரும்பிய போது இவா்களது காா் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்துக்குள் கவிழ்ந்தது. இதில் காரில் பயணம் செய்தவா்களுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
பேருந்து கவிழ்ந்தது... இதேபோல, கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் சவரிக்காடு பகுதியில் கொடைக்கானல் நோக்கி வந்த சுற்றுலாப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணம் செய்த 20 போ் லேசான காயமடைந்தனா். இது குறித்து கொடைக்கானல் போலீஸாா் விசாரணை நடத்தினா்.