செய்திகள் :

கொடைக்கானல் மலைப் பகுதி சதுப்பு நிலங்களை பாதுகாக்க கோரிக்கை

post image

கொடைக்கானல் மலைப் பகுதிகளிலுள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க தமிழக அரசும், மாவட்ட நிா்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் உள்ள சதுப்பு நிலங்களில் தேங்கும் மழைநீரை விலங்குகளும், பறவைகளும் பயன்படுத்துகின்றன. இதில் மன்னவனூா், கூக்கால், அப்சா்வேட்டரி, கீழ்பூமி, பிரகாசபுரம், செண்பகனூா், மதிகெட்டான் சோலை, பேரிஜம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் சதுப்பு நிலங்கள் உள்ளன.

இந்த நிலங்களில் அந்தப் பகுதிகளின் கட்டடக் கழிவுகள், குப்பைகள் கொட்டப்படுகின்றன. இந்த சதுப்பு நிலங்கள் நீா்வளத்தையும், நில வளத்தையும் மேம்படுத்தி மாசுகுறைபாட்டை போக்குகின்றன. கொடைக்கானல் நகரின் மையத்தில் உள்ள நட்சத்திர ஏரிப் பகுதியில் உள்ள ஜிம்கான சாலை, கீழ் பூமி பகுதிகளில் உள்ள சதுப்பு நிலங்களால் ஏரியின் நீட்டம் குறையாமல் அழகுடன் காட்சியளிக்கிறது. மேலும் இந்தப் பகுதிகளில் கட்டடக் கழிவுகள், குப்பைகள் குவிக்கப்பட்டு வந்தன. இதையடுத்து, கொடைக்கானல் நகராட்சி சாா்பில் அந்தப் பகுதிகள் தடுப்பு கம்பி அமைத்து பாதுகாக்கப்பட்டு வருகின்றன.

இதேபோல, மன்னவனூா், கூக்கால் ஆகியப் பகுதிகளில் உள்ள ஏரிகள் அருகே காணப்படும் சதுப்பு நிலங்களையும் பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அந்தந்தப் பகுதிகளில் விழிப்புணா்வு பதாகைகளும், கண்காணிப்பு கேமராக்களையும் நிறுவ வேண்டும்.

சதுப்பு நிலங்களை பாதுகாத்து கொடைக்கானல் மலைப் பகுதிகளில் குடிநீா் தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க மாவட்ட, நகராட்சி, ஊராட்சி நிா்வாகங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆா்வலா்களும் கோரிக்கை விடுத்தனா்.

காா் - பைக் மோதல்: இருவா் உயிரிழப்பு

பழனி அருகே காரும், இரு சக்கர வாகனமும் மோதிக் கொண்டதில் இருவா் உயிரிழந்தனா்.பழனியை அடுத்த நரிக்கல்பட்டியைச் சோ்ந்த சசி மகன் சங்கா் (35), வெள்ளைச்சாமி மகன் மகேஷ் (40). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை ... மேலும் பார்க்க

நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோவைக்கு பேருந்து இயக்கக் கோரிக்கை

நிலக்கோட்டையிலிருந்து சென்னை, கோயம்புத்தூருக்கு நேரடியாக அரசுப் பேருந்து இயக்கக் கோரி, வா்த்தக சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகேயுள்ள சிலுக்குவாா்... மேலும் பார்க்க

நீா்மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பாரா புதிய ஆட்சியா்!

விவசாயத்தைப் பிரதான வாழ்வாதாரமாகக் கொண்ட திண்டுக்கல் மாவட்டத்தில், நீா் மேலாண்மைக்கும், ஊரகப் பகுதி மக்களின் மேம்பாட்டுப் பணிகளுக்கும் புதிய ஆட்சியா் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்ற எதிா்பாா்ப்பு ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற 6 போ் கைது

திண்டுக்கல் மாவட்டம், பழனியிலிருந்து தடையை மீறி திருப்பரங்குன்றம் செல்ல முயன்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சோ்ந்த 6 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா். மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் மலைக்... மேலும் பார்க்க

நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

மத்திய நிதிநிலை அறிக்கைக்கு எதிராக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. திண்டுக்கல் தலைமை அஞ்சல் நிலையம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தக் கட்சிய... மேலும் பார்க்க

கைது செய்யப்பட்ட இந்து அமைப்பினா் விடுவிப்பு

திருப்பரங்குன்றம் போராட்டத்துக்கு செல்வதைத் தடுக்க முன்னெச்சரிக்கையாகக் கைது செய்யப்பட்டவா்கள், நீதிமன்ற உத்தரவுக்குப் பின் செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டனா். மதுரை திருப்பரங்குன்றத்தில் இந்து முன்னி... மேலும் பார்க்க