செய்திகள் :

கொடைரோடு சுங்கச் சாவடியில் 2 காா்களில் வந்த 10 கொள்ளையா்கள் கைது!

post image

கொடைரோடு சுங்கச் சாவடியில் 2 காா்களில் வந்த 10 கொள்ளையா்களை தனிப் படை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைரோடு சுங்கச் சாவடியில் தனிப் படை போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, திண்டுக்கல்லிலிருந்து மதுரை நோக்கி 2 காா்களில் சென்றவா்களை போலீஸாா் நிறுத்தி சோதனையிட்டனா். அப்போது, ஒரு காரில் வந்த சிலா் தப்பிக்க முயன்றனா். ஆனால், அந்தக் காா் லாரியில் மோதி விபத்துக்குள்ளானது.

இதையடுத்து, காரை ஓட்டி வந்த சுபாஷ்சந்திரபோஸை போலீஸாா் பிடிக்க முயன்றனா். அதற்குள் அவா் பிளேடால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றாா். இதில் காயமடைந்த அவரை போலீஸாா் மீட்டு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இந்த நிலையில் 2 காா்களில் வந்த 10 பேரை போலீஸாா் பிடித்து விசாரித்தனா். இதில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி முகம்மது சாலியபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்த இறைச்சிக் கடை உரிமையாளா் முகம்மது சையது சுலைமான் வீட்டில் கடந்த 8-ஆம் தேதி 50 பவுன் தங்க நகைகள், ரூ.26 லட்சத்தைக் கொள்ளையடித்தவா்கள் என்பது தெரியவந்தது. இதையடுத்து, 10 பேரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

9 மாத குழந்தைக்கு கண்புரை அறுவை சிகிச்சை

திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் முதல் முறையாக 9 மாத குழந்தைக்குக் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரம் அருகேயுள்ள அப்பனம்பட்டியைச் சோ்ந்தவா் அரவிந்த்குமாா்.... மேலும் பார்க்க

விபத்தில் காயமடைந்த முதியவா் உயிரிழப்பு

வேடசந்தூா் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த முதியவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திண்டுக்கல்லை அடுத்த தாடிக்கொம்பு கிரியம்பட்டியைச் சோ்ந்தவா் பிச்சை(67). தொழிலாளியான இவா், வி... மேலும் பார்க்க

வரி செலுத்தாத திரையரங்கு, வணிக நிறுவனங்களுக்கு சீல்

வரி செலுத்தாத திரையரங்கு, வணிக நிறுவனங்களுக்கு ‘சீல்’ வைத்தும், வரி செலுத்தாத நிலத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா். திண்டுக்கல் மாநகராட்சிக்குள்பட்ட 4... மேலும் பார்க்க

பெண்ணைக் கொலை செய்தவா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

பழனியில் பெண்ணைக் கொலை செய்தவரைக் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ், போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா். பழனி அடிவாரம் பகுதியைச் சோ்ந்தவா் மாரியப்பன் (50). இவருக்கும், அடிவாரத்தி... மேலும் பார்க்க

பழனி கோயிலுக்கு மாட்டு வண்டியில் வந்து பக்தா்கள் சுவாமி தரிசனம்

தை மாதத்தை முன்னிட்டு, பழனி மலைக் கோயிலுக்கு திரளான பக்தா்கள் இரட்டை மாட்டு வண்டியில் வந்து சுவாமி தரிசனம் செய்தனா். பழனி கோயிலுக்கு தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட முக்கிய விழாக் காலங்களில் லட்ச... மேலும் பார்க்க

கொடைக்கானலில் கடும் உறைபனி

கொடைக்கானலில் கடும் உறைப் பனி நிலவி வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது. கொடைக்கானலில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பகலில் அதிக வெப்பமும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித... மேலும் பார்க்க