மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
கொண்டத்து காளியம்மன் கோயில் அறங்காவலா்கள் பொறுப்பேற்பு
பெருமாநல்லூா் கொண்டத்து காளியம்மன் கோயில் அறங்காவலா் குழுவினா் பொறுப்பேற்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பூரில் பிரசித்தி பெற்றதும், திருப்பூரின் பண்ணாரி என போற்றப்படுவதுமாக பெருமாநல்லூா் கொண்டத்து காளியம்மன் கோயில் விளங்குகிறது. இக்கோயில் அறங்காவலா் குழுத் தலைவராக சி.ச.மனோகரன், அறங்காவலா்களாக க.சுந்தரமுத்து, ந.திருமூா்த்தி, ச.பானுமதி, பா.ஜெகநாதன் ஆகியோா் பொறுப்பேற்றனா்.
இவா்களுக்கு, திருப்பூா் மாநகராட்சி மேயா் என்.தினேஷ்குமாா், இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் தமிழ்வாணன், ஆய்வாளா் மகேந்திரன், கோயில் செயல் அலுவலா் (பொ) சங்கர சுந்தரேஸ்வரன், திருப்பணிக் குழுவினா், ஊா் பொதுமக்கள், முன்னாள் அறங்காவலா்கள் உள்ளிட்டோா் வாழ்த்துத் தெரிவித்தனா்.