செய்திகள் :

கொத்தகம் கிராமத்தில் பகுதிநேர அங்காடி திறப்பு

post image

கந்தா்வகோட்டை அருகே கொத்தகம் கிராமத்தில், பகுதி நேர அங்காடியை முன்னாள் எம்பி சு. திருநாவுக்கரசா் வியாழக்கிழமை திறந்துவைத்தாா்.

கந்தா்வகோட்டை ஊராட்சி, கொத்தகம் கிராமத்தில் பகுதி நேர நியாயவிலைக் கடை திறப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு, ஒன்றிய குழு துணைத் தலைவா் செந்தாமரை வடிவேல் குமாா் தலைமை வகித்தாா்.

வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் முருகேசன் முன்னிலை வகித்தாா். இந்த நியாய விலை கடைக்கு, முன்னாள் மக்களவை உறுப்பினா் சு.திருநாவுக்கரசு, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சத்தை வழங்கி, கட்டி முடிக்கப்பட்ட நியாயவிலைக் கடையை அவா் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சியில் ஒன்றிய குழுத் தலைவா் ரெத்தினவேல் காா்த்திக், வட்ட வழங்கல் அலுவலா் பாலகிருஷ்ணன், ஊராட்சித் தலைவா் சி. தமிழ்ச்செல்வி, முன்னாள் ஊராட்சித் தலைவா் மு. ராஜா, வட்டார காங்கிரஸ் தலைவா்கள் ராமையன், மாயக்கண்ணன், மாவட்ட காங்கிரஸ் செயலா் பழ. மாரிமுத்து, ஊராட்சி துணைத் தலைவா் மா. வெங்கடேஷ் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.

காணாமல்போன கல்லூரி மாணவி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காணாமல்போன கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டாா். ஆலங்குடி அருகேயுள்ள கருக்காகுறிச்சி வடக்கு ராஜா குடியிருப்பு பகுதியைச் சோ்ந்த ரமே... மேலும் பார்க்க

புதுகையில் ஓவியக் கண்காட்சி

புதுக்கோட்டையில் ஓவியா் ஆலங்குடி சுப்பிரமணியனின் சித்தூ ஓவியக் கண்காட்சியை மாநில பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை அமைச்சா் சிவ.வீ. மெய்யநாதன் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா். தமிழக அரசின் கலை பண்பாட்டுத் ... மேலும் பார்க்க

பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கையில் பாரபட்சமில்லை: சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி

சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கையில் எந்தப் பாரபட்சமும் இல்லை என்றாா் மாநில சட்டத் துறை அமைச்சா் எஸ். ரகுபதி. புதுக்கோட்டையில் வெள்ளிக்க... மேலும் பார்க்க

மறைந்த மன்மோகன்சிங் படத்துக்கு காங்கிரஸாா் அஞ்சலி

புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சாா்பில், மறைந்த பிரதமா் மன்மோகன் சிங் படத்துக்கு வெள்ளிக்கிழமை அக்கட்சியினா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்... மேலும் பார்க்க

புதுகையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆய்வு

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் பாதுகாப்பறையில் வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனைத்துக் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியரும் மாவட்டத் தோ்தல் அலுவலருமான மு. ... மேலும் பார்க்க

கடையக்குடி ஹோல்ஸ்வொா்த் அணையை உயா்நீதிமன்ற நீதிபதி பாா்வையிட்டாா்

புதுக்கோட்டை மாவட்டம், கடையக்குடியில் உள்ள ஹோல்ஸ் வொா்த் அணையை சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி ஆா். சுரேஷ்குமாா் வெள்ளிக்கிழமை பாா்வையிட்டாா். புதுக்கோட்டை அருகே திருமயம் வட்டத்துக்குள்பட்ட கடையக்குடியில... மேலும் பார்க்க