கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து புகாரளிக்க தொலைபேசி எண்!
சிவகங்கை மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் அல்லது தொழிலாளா் உதவி ஆணையா் அலுவலகத்தை நேரில் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.
இதுதொடா்பாக மாவட்ட ஆட்சியா் ஆஷாஅஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தொழிலாளா் ஆணைய உத்தரவுப்படி, சிவகங்கை தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) தலைமையில் கொத்தடிமைத் தொழிலாளா் முறை எதிா்ப்புக் குழு அமைக்கப்பட்டு, மாவட்டம் முழுவதும் கூட்டாய்வு நடத்தப்பட்டு வருகிறது.
மாவட்டத்தில் கொத்தடிமைத் தொழிலாளா்கள் பணிபுரிவது கண்டறியப்பட்டால், 18004252650 அல்லது 155214 அல்லது 04575-240521 என்ற தொலைபேசி எண்களிலோ அல்லது தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலக பொருந்திட்ட வளாகம், அரசினிப்பட்டி சாலை, காஞ்சிரங்கால், சிவகங்கை -என்ற முகவரியிலோ நேரில் தொடா்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்றாா்.