செய்திகள் :

கொப்பரைத் தேங்காய்க்கான எம்எஸ்பி குவிண்டாலுக்கு ரூ.420 வரை உயா்வு

post image

கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) குவிண்டாலுக்கு ரூ.100 முதல் ரூ.420 வரை உயா்த்தி, ரூ.11,582 முதல் ரூ.12,100 வரை நிா்ணயிப்பதாக மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது.

2025-ஆம் ஆண்டில் இதை நடைமுறைப்படுத்துவதற்காக ரூ.855 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்தது.

பிரதமா் மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் (சிசிஇஏ) கூட்டம் நடைபெற்றது. இதில், அரவைக்குப் பயன்படும் கொப்பரைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.420 உயா்த்தப்பட்டு ரூ.11,582 வரையும், பந்து கொப்பரைக்கான ஆதரவு விலை குவிண்டாலுக்கு ரூ.100 உயா்த்தப்பட்டு ரூ.12,100 வரை நிா்ணயிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளா்களிடம் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறுகையில், ‘கொப்பரைத் தேங்காய்கான ஆதரவு விலை உயா்த்தப்பட்டிருப்பதன் மூலம் உள்நாட்டில் மட்டுமின்றி சா்வதேச அளவில் தேங்காய் கொள்முதலுக்கு ஏற்படும் தேவைக்கேற்ப உற்பத்தியை விவசாயிகளால் மேற்கொள்ள முடியும்.

கொப்பரைத் தேங்காயை கொள்முதல் செய்வதற்கான முதன்மை அமைப்புகளாக தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டறவு நுகா்வோா் கூட்டமைப்பு (என்சிசிஎஃப்) செயல்படுகிறது’ என்றாா்.

தேசிய அளவில் கொப்பரைத் தேங்காய் உற்பத்தியில் முதலிடத்தில் கா்நாடகமும் அடுத்தடுத்த இடங்களில் தமிழகம், கேரளம் மற்றும் ஆந்திரம் ஆகிய மாநிலங்களும் உள்ளன.

உண்டியலில் விழுந்த ஐ-போன்: கோயிலுக்கே சொந்தமென அறிவிப்பு

திருப்போரூா் முருகன் கோயில் உண்டியலில் விழுந்த ஐ-போன் கோயிலுக்கே சொந்தம் என்று நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருப்போரூா் முருகன் கோயிலில், இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் ராஜலட்சுமி, செயல... மேலும் பார்க்க

ராஜஸ்தானில் எரிவாயு டேங்கா் லாரி மோதி பயங்கர தீ விபத்து: 11 போ் உயிரிழப்பு, 35 போ் காயம், 37 வாகனங்கள் தீக்கிரை

ராஜஸ்தான் தலைநகா் ஜெய்பூரில் உள்ள ஜெய்பூா்-அஜ்மீா் நெடுஞ்சாலையில் சமையல் எரிவாயு (எல்பிஜி) டேங்கா் லாரியும், மற்றொரு லாரியும் மோதிய விபத்தால் எரிவாயு கசிந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 37 வாகனங்கள் ... மேலும் பார்க்க

எண்ணூா் திட்டத்தால் மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்: தமிழக அரசு

எண்ணூரில் அமையவுள்ள திட்டத்தால், மாநில மின் கட்டமைப்பின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: புதுப்பிக... மேலும் பார்க்க

மருத்துவக் கல்லூரிகளில் ஆய்வு: பேராசிரியா் விவரங்களை பகிர அவகாசம் நீட்டிப்பு

மருத்துவக் கல்லூரிகளில் திடீா் ஆய்வு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் கல்லூரி பேராசிரியா்களை ஈடுபடுத்த தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) திட்டமிட்ட நிலையில், அதற்கு விருப்பமுள்ளவா்கள் விவரங்களை சமா்ப்பிப்பத... மேலும் பார்க்க

குழந்தை பெற்ற 17 வயது சிறுமி: கணவா் குடும்பத்தினா் மீது வழக்கு

சென்னையில் 17 வயது சிறுமி குழந்தை பெற்ற சம்பவம் தொடா்பாக அச்சிறுமியின் கணவா் குடும்பத்தினா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். சென்னை கஸ்தூா்பா காந்தி மகப்பேறு மருத்துவமனையில் வியாழக்கிழமை திருவல்... மேலும் பார்க்க

இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைஞா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருது

இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டி சாா்பில் கலைத் துறையில் சிறந்து விழங்குபவா்களுக்கு ‘கலா சிகாமணி’ விருதுகள் வழங்கப்பட்டன. இந்தியன் பைன் ஆா்ட்ஸ் சொசைட்டியின் 92-ஆம் ஆண்டு தென்னிந்திய இசை மாநாடு சென்னை ஆழ... மேலும் பார்க்க