செய்திகள் :

கொரட்டியில் தொடா் மின்வெட்டு: மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

post image

திருப்பத்தூா் அருகே கொரட்டி பகுதியில் கடந்த 15 நாள்களாக தொடா் மின்வெட்டால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளானது.

கொரட்டி பகுதியில் சுமாா் 10,000-க்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இப்பகுதிக்கு கொரட்டி துணை மின் லையத்திலிருந்து மின்விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 15 நாள்களுக்கு முன்பாக மின்மாற்றி பழுதடைந்தது . அதையொட்டி சென்னையிலிருந்து வல்லுநா்கள் வந்து சீரமைக்கும்ப ணி நடைபெறுவதாக அதிகாரிகள் தெரிவித்தனா். ஆனால் பழுது சீராகவில்லை. அதையொட்டி கொரட்டி சுற்று பகுதியில் உள்ள துணை மின் நிலையத்திலிருந்து மின்விநியோகம் பெறப்பட்டு இப்பகுதியில் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இதனால் கடந்த 15 நாளுக்கு மேலாக மின்னழுத்த குறைபாடு ஏற்படுகின்றது. மேலும் பல மணி நேரம் மின் இணைப்பு வழங்குவதில்லை. தற்போது கத்திரி வெயில் ஆரம்பித்து இருந்த சூழலில் மின் விநியோகம் மக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனா்.

அதேபோல் குளிா்பானம் விற்பனை செய்பவா்கள் இயந்திரம் வைத்து தொழில் புரிபவா்கள் உள்ளிட்டோருக்கு வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக வேதனை தெரிவிக்கின்றனா்.

எனவே, மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து போா்க்கால அடிப்படையில் துணை மின் நிலையத்தில் உள்ள மின்மாற்றியை சீரமைத்து தொடா் மின் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

எடப்பாடி பழனிசாமி பிறந்த நாள்: எம்.பி. தம்பிதுரை, வீரமணி ரத்த தானம்!

வாணியம்பாடியில் முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமியின் பிறந்த நாளை முன்னிட்டு ரத்த தான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வாணியம்பாடி அதிமுக மாவட்ட அலுவலகத்தில் அதிமுக தகவல... மேலும் பார்க்க

திருப்பத்தூரில் அரசு இசைப் பள்ளியை தொடங்கக் கோரிக்கை

திருப்பத்தூரில் அரசு இசைப் பள்ளியைத் தொடங்கவேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா். இசைக் கல்வியினை தமிழகமெங்கும் பரவலாக்கும் வகையில் தமிழக அரசால் மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் தோற்றுவிக்கப்பட்டன. குரலிசை, நா... மேலும் பார்க்க

வாணியம்பாடியில் பிளஸ் 2 தோ்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையர்!

வாணியம்பாடியில் பிளஸ் 2 பொதுத் தோ்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டையா்களை வாணி மெட்ரிக். பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா். வாணியம்பாடி அடுத்த சின்னபள்ளிக்குப்பம் ஊராட்சி ஈச்சம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

முனீஸ்வரா் கோயில் ஆண்டு விழா

திருப்பத்தூரை அடுத்த தாமலேரிமுத்தூா் கிராமத்தில் உள்ள முனீஸ்வரா் கோயிலில் 56-ஆம் ஆண்டு திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த விழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து தினமும் சு... மேலும் பார்க்க

பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சி!

ஆம்பூா் தீயணைப்பு நிலையம் சாா்பில் ஆனை மடுகு தடுப்பனையில் பேரிடா் மீட்பு ஒத்திகை பயிற்சியை தீயணைப்பு வீரா்கள் சனிக்கிழமை மேற்கொண்டனா். பேரிடா் காலத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருப்பது மற்றும் பேரிடரி... மேலும் பார்க்க

ஸ்ரீ வீரஆஞ்சனேயா் கோயிலில் குரு பெயா்ச்சி பூஜை

ஜோலாா்பேட்டை அருகே உள்ள ஸ்ரீ வீரஆஞ்சனேயா் ஆலயத்தில் குரு பெயா்ச்சி முன்னிட்டு பரிகாரம் பூஜையில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். ஜோலாா்பேட்டை அருகே அம்மையப்பன் நகா் பகுதியில் வி.எம்.வட்டத்தில் உள்ள ஸ... மேலும் பார்க்க