செய்திகள் :

'கொரோனா முதல் ராணி எலிசபெத் மரணம் வரை...' - புதிய நாஸ்ட்ரடாமஸ்ஸின் லேட்டஸ்ட் கணிப்பு

post image

இந்தியாவைப் பிறப்பிடமாகக் கொண்டது நாடி ஜோதிடம். இந்த நாடி ஜோதிடத்தின் மூலம் இங்கிலாந்தை சேர்ந்த கிரெய்க் ஹாமில்டன்-பார்க்கர் பல எதிர்கால விஷயங்களை கணித்துக் கூறி வருகிறார். இவர் கூறுவது நடக்கிறது எனப் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

கடந்த மார்ச் 4-ம் தேதி, அவர் வெளியிட்ட யூடியூப் வீடியோவில், ஆயில் டேங்கர் ஒன்று ஒரு விபத்தில் சிக்கும் என்று கூறியிருந்தார். அடுத்த ஏழு நாட்களிலேயே அதாவது மார்ச் 11-ம் தேதி, வடக்கு கடலில் எம்வி சோலாங் சரக்குக் கப்பல், 18,000 டன் ஜெட் எரிபொருளை ஏற்றிச் சென்ற அமெரிக்கக் கொடியிட்ட எம்வி ஸ்டெனா இம்மாகுலேட் என்ற எண்ணெய் டேங்கருடன் மோதியது.

கொரோனா முதல் ராணி எலிசபெத் மரணம் வரை...

இது பார்க்கரின் முதல் கணிப்பு அல்ல. இங்கிலாந்து ராணி எலிசபெத்தின் இறப்பு, கொரோனா பேரிடர், தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் ட்ரம்ப்பின் மீது கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு என பல சம்பவங்களை இதற்கு முன்பு கணித்துக் கூறியுள்ளார். அவை அனைத்தும் அவர் கூறிய சில நாட்களிலேயே நடந்தும் உள்ளது.

தனது இருபதுகளில் இந்தியா வந்த பார்க்கர் இங்கிருக்கும் ஜோதிடத்தின் மீது நாட்டம் கொண்டு நாடி ஜோதிடத்தை கற்றுக்கொண்டுள்ளார். தற்போது இவர் தனது மனைவியுடன் சேர்ந்து இந்தக் கணிப்புகளை கணித்து வருகிறார். சிலர் இவரை 'புதிய நாஸ்ட்ரடாமஸ்' என்று செல்லமாக அழைக்கப்படுகிறார். மூடபழக்க வழக்கங்களை எதிர்க்கும் மக்கள் இவரைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்

`ரூ.434 கோடி இழப்பீடு'- டெலிவரி ஊழியருக்கு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு! - என்ன நடந்தது?

கலிபோர்னியாவில் உள்ள நடுவர் மன்றம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தால் காயமடைந்த டெலிவரி ஓட்டுநருக்கு, இந்திய மதிப்பில் 434.78 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட சூ... மேலும் பார்க்க

Vikatan Weekly Quiz: `சாம்பியன்ஸ் டிராபி வெற்றி டு தமிழக பட்ஜெட்' - இந்த வார கேள்விகள்!

நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி-க்களை மத்திய அமைச்சர் கடுமையாக விமர்சித்தது, தமிழக பட்ஜெட் போன்ற அரசியல் நிகழ்வுகள் உட்பட விளையாட்டு, சினிமா என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வித் தொகுப... மேலும் பார்க்க

கும்பமேளா: 45 நாள்களில் ரூ.30 கோடி; யோகி பாராட்டிய படகு உரிமையாளர் -`ரூ.12 கோடி' கட்ட ஐ.டி நோட்டீஸ்!

உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா 45 நாள்கள் விமரிசையாக நடந்து சிவராத்திரியோடு முடிவுக்கு வந்துள்ளது. இக்கும்பமேளா குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டமன்றத்தில் அளித்த பதிலில், ''கும்பமேளாவில் பி... மேலும் பார்க்க

குறுக்கே வந்தப் பூனை; அடித்து, உயிரோடு கொளுத்திய மூடநம்பிக்கையாளர்கள்... உபி-யில் அதிர்ச்சி சம்பவம்!

குறுக்கே பூனை வந்ததால், அந்தப் பூனையை உயிரோடு எரித்து கொலைசெய்த சம்பவம், உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப்பிரதேச மாநிலம், மொரதாபாத் பகுதியில் ஒரு பெண்ணும் அவரது நண்பரும் பைக்கி... மேலும் பார்க்க