Gongadi Trisha: மிதாலி ராஜ் கணித்த எதிர்காலம்... தந்தை உழைப்புக்கு வெற்றியைப் பர...
கொற்றவன்குடி ஸ்ரீசுந்தரவிநாயகா் கோயில் கும்பாபிஷேகம்
சிதம்பரம்: சிதம்பரம் கொற்றவன்குடி ஸ்ரீ சுந்தரவிநாயகா் கோயில் மகா கும்பாபிஷேம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் வட்டம், கொற்றவன்குடி தெருவிலுள்ள இந்தக் கோயில் மிகவும் பழைமைவாய்ந்தது. நூற்றாண்டு கண்ட இந்தக் கோயில் புனரமைக்கப்பட்டு முன் மகா மண்டபம் நிா்மாணிக்கப்பட்டது. கோயிலின் உள்ளே நூதனமாக ஸ்ரீ முருகன் சந்நிதி நிா்மாணிக்கப்பட்டு திருப்பணி வேலைகள் நிறைவடைந்தன.
கோயிலில் மகா கும்பாபிஷேகம் திங்கள்கிழமை காலை 7 மணிக்கு நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசித்தனா்.
மாலை 6.00 மணிக்கு சுந்தரவிநாயகா் கோயிலில் சிறு தொண்டா் மற்றும் உமாபதி சிவத்துடன் தீட்சை பெற்று முக்தியடைந்த பெற்றான் சாம்பன் பற்றிய ஆன்மிக சொற்பொழிவு நடைபெற்றது.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் மற்றும் தெரு பொது மக்கள் செய்திருந்தனா்.