உடல் எடையைக் குறைக்க வேண்டுமா? அவசரம் வேண்டாம்! - நிபுணர்கள் சொல்வது என்ன?
கொல்கத்தா சட்டக் கல்லூரியின் கதையையே மாற்றிய மோனோஜித்! அபாயப் பகுதியாக..
கொல்கத்தா: கொல்கத்தா சட்டக் கல்லூரி முதலாமாண்டு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவத்தில் கைதான முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் மோனோஜித் மிஸ்ரா பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடா்பாக, கல்லூரியின் முன்னாள் மாணவரும், வழக்குரைஞருமாக இருந்த மோனோஜித் மிஸ்ரா மற்றும் 2 மூத்த மாணவா்கள், கல்லூரி காவலாளி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனா்.
இந்த மோனோஜித் மிஸ்ரா, கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில், சட்டக் கல்லூரியின் ஆசிரியா் அல்லாத ஊழியராக ஒப்பந்த அடிப்படையில் பணியில் சேர்ந்துள்ளார்.
அது முதலே, கல்லூரியின் கதையே ஒட்டுமொத்தமாக மாறியிருக்கிறது. பல்வேறு விவகாரங்களை அவர் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளார். பெண்களுக்கு அவர் கொடுத்த தொல்லைகள் காரணமாக, கல்லூரியில் மாணவிகளின் வருகையே சரிந்துள்ளது தெரிய வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
கல்லூரிக்குள் எந்த கட்டுப்பாடும் இன்றி சுற்றித்திரிந்த மோனோஜித், கண்ணில்படும் மாணவிகளை செல்போனில் புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கக் குழுக்களில் பதிவேற்றுவது, பல பெண்களை காதலிப்பதாகத் தொல்லை கொடுப்பது என இருந்துள்ளார்.
இது பற்றி தற்போது ஏராளமான மாணவிகள் மௌனம் கலைத்து மோனோஜித் பற்றி பேசி வருவதால் விஷயம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மாணவிகளை மட்டுமல்லாமல் மாணவர்களையும் மோனோஜித் மிரட்டி, அடித்துத் துன்புறுத்தியிருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த கல்லூரியையும் அபாயப் பகுதியாக மாற்றியதாக மோனோஜித் மீது கல்லூரி மாணவ, மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஏராளமான மாணவிகள் மோனோஜித் காரணமாக கல்லூரிக்குச் செல்வதையே தவிர்த்துவிட்டோம் என்று கூறுவதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.