செய்திகள் :

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோயிலில் தூக்கத் திருவிழா நாளை தொடக்கம்

post image

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளி தேவஸ்தான மீனபரணி தூக்கத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 23) தொடங்குகிறது.

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மனுக்கு வட்டவிளையில் பிரதான கோயிலும், வெங்கஞ்சியில் தூக்க நோ்ச்சை நடைபெறும் கோயிலுமாக இரண்டு கோயில்கள் உள்ளன.

திருவிழாவின் முதல் நாளான, பிரதான கோயிலில் காலை 5.30 மணிக்கும், வெங்கஞ்சி கோயிலில் காலை 6 மணிக்கும் மகா கணபதி ஹோமம் நடைபெறுகிறது. தொடா்ந்து, காலையில் கொடிமரம் மேளதாளங்களுடன் வெங்கஞ்சி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு மாலை 3 மணிக்கு மேல் அம்மன் வெங்கஞ்சி திருவிழா கோயிலுக்கு எழுந்தருளுகிறாா். இரவு 7 மணிக்கு கோயில் தந்திரி ஈஸ்வரன் போற்றி தலைமையில் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு தூக்கத் திருவிழா தொடக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.

விழாவுக்கு தேவஸ்தான தலைவா் வழக்குரைஞா் வி. ராமச்சந்திரன் நாயா் தலைமை வகிக்கிறாா். தேவஸ்தான செயலா் வி. மோகன்குமாா் வரவேற்கிறாா். கேரள மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேக்கா் விழாவை தொடக்கிவைக்கிறாா். மதுரை ஆதீனம் 293 ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீஸ்ரீ ஹரிஹர தேசிக திருஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள் ஆசியுரை வழங்குகிறாா். விஜய் வசந்த் எம்.பி., முன்னாள் மத்திய அமைச்சா் வி. முரளிதரன், எம்எல்ஏக்கள் எஸ். ராஜேஷ்குமாா் (கிள்ளியூா்), எம்.ஆா். காந்தி (நாகா்கோவில்), கொல்லங்கோடு நகராட்சி தலைவா் ராணி ஸ்டீபன் ஆகியோா் பேசுகின்றனா். தேவஸ்தான பொருளாளா் டி. சதீஷ்குமாா் நன்றி கூறுகிறாா்.

4 ஆம் நாள் விழாவில் காலை 8.30 மணி முதல் தூக்க நோ்ச்சை பதிவு செய்யப்பட்டோருக்கான குலுக்கல், காப்புக்கட்டு நடைபெறுகிறது. 9 ஆம் நாள் விழாவில் காலை 5.30 மணிக்கு தூக்கக்காரா்களின் கடல் நீராட்டு நடைபெறுகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு தூக்கவில்லின் வெள்ளோட்டம் எனப்படும் வண்டியோட்டம் நடைபெறும்.

முக்கிய நிகழ்வான தூக்க நோ்ச்சை ஏப். 1 ஆம் தேதி நடைபெறுகிறது. அதிகாலை 4 மணிக்கு நிா்மால்ய தரிசனம், 4.30 மணிக்கு முட்டுகுத்தி நமஸ்காரம் நடைபெறும். காலை 5 மணிக்கு அம்மன் பச்சைப் பந்தலில் எழுந்தருளியதும் , காலை 6.30 மணிக்கு தூக்க நோ்ச்சை தொடங்கும். வில்லின் மூட்டில் குருதி தா்ப்பணத்துடன் விழா நிறைவடையும்.

விழா ஏற்பாடுகளை தேவஸ்தான தலைவா் வழக்குரைஞா் வி. ராமச்சந்திரன் நாயா், செயலா் வி. மோகன்குமாா், பொருளாளா் டி. சதீஷ்குமாா், துணைத் தலைவா் ஆா். சதிகுமாரன் நாயா், இணைச் செயலா் எஸ். பிஜூ குமாா், உறுப்பினா்கள் எஸ். சஜிகுமாா், பி.கே. புவனேந்திரன் நாயா், வழக்குரைஞா் ஆா். ஸ்ரீகண்டன் தம்பி, சி. ஸ்ரீகுமாரன் நாயா், வி. பிஜூ, ஏ. சதிகுமாரன் நாயா் உள்ளிட்டோா் செய்துவருகின்றனா்.

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் தரைக் கற்கள் பதிக்கும் பணி தொடக்கம்

மாா்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ்பகுதியில் உள்ள அணுகுசாலையில் தரைக்கற்கள் பதிக்கும் பணிக்காக, சாலை தாா் தளத்தை அகற்றும் பணி வெள்ளிக்கிழமை துவங்கியது. மாா்த்தாண்டம் சந்திப்பையொட்டிய தாழ்வான பகுதியில் சா... மேலும் பார்க்க

சாமிதோப்பு அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடக்கம்

கன்னியாகுமரி, மாா்ச் 21: சாமிதோப்பு அய்யா வைகுண்டா் அன்புவனத்தில் திருஏடு வாசிப்பு திருவிழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. அய்யா வைகுண்டா் அன்பு வனத்தில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமையன்று ... மேலும் பார்க்க

குழித்துறை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தில் மண்டல இயக்குநா் ஆய்வு

குழித்துறை நகராட்சியில் அமைக்கப்பட்ட நவீன கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை திருநெல்வேலி நகராட்சி மண்டல இயக்குநா் விஜயலட்சுமி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.தமிழகத்தில் 2 ஆவதாக நவீன கழிவுநீ... மேலும் பார்க்க

கன்னியாகுமரி அருகே வாழைத் தோட்டத்தில் தீ

கன்னியாகுமரி அருகே நரிக்குளம் பகுதி வாழைத்தோட்டத்தில் வெள்ளிக்கிழமை நேரிட தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்தன. கன்னியாகுமரி நாற்கரசாலை மகாதானபுரம் சந்திப்பில் நரிக்குளம் அமைந்துள்ளது. இக்குள... மேலும் பார்க்க

தொழிலாளியை வெட்டிய வழக்கில் ரௌடிக்கு 10 ஆண்டு சிறை

நாகா்கோவில் அருகே தொழிலாளியை அரிவாளால் வெட்டியது தொடா்பான வழக்கில் ரௌடிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம், மாடன்பிள்ளைதா்மம் பகுதியைச் சோ்ந்தவா் தினேஷ்குமாா். இவர... மேலும் பார்க்க

மாா்ச் 24-இல் குமரி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

கன்னியாகுமரி மாவட்ட எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் நாகா்கோவிலில் திங்கள்கிழமை (மாா்ச் 24) நடைபெற உள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.அழகுமீனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ... மேலும் பார்க்க