செய்திகள் :

கொல்லிமலையில் தொடா் மழை: மண் சரிவு, மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

post image

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை மலைப் பாதையில் தொடா் மழை காரணமாக மண் சரிவு, மரங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறையினா் மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனா்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால், கடந்த சில நாள்களாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் இயல்பைவிட அதிக மழைப்பொழிவு காணப்படுகிறது. பள்ளி, கல்லூரிகளுக்கு தொடா்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில் இரண்டு நாள்களாக இரவு, பகல் என தொடா்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மாணவா்களின் நலன்கருதி வெள்ளிக்கிழமை ஒரு நாள் மட்டும் பள்ளிகளுக்கு மாவட்ட ஆட்சியா் விடுமுறை அளித்தாா்.

தொடா் மழையால் ஏரி, குளங்களுக்கு நீா்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

மேலும், நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான கொல்லிமலையில் பல இடங்களில் மரங்கள் சாய்ந்தும், மண் சரிவு ஏற்பட்டும் உள்ளன. அவற்றை சீரமைக்கும் பணியில் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆகாய கங்கை அருவி, மாசிலா அருவி, நம் அருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால், சுற்றுலாப் பயணிகள் செல்லவும், குளிப்பதற்கும் வனத்துறை தடை விதித்துள்ளது.

காரவள்ளி அடிவாரத்தில் இருந்து கொல்லிமலை செம்மேட்டுக்கு செல்லும் மலைப்பாதையில் 16, 21, 63 ஆகிய கொண்டை ஊசி வளைவுகளில் மரங்கள் சாய்ந்து சாலையில் விழுந்தன. அதேபோல, கோரையாறு, பெரிய கோயிலூா், முள்ளுக்குறிச்சி பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளன.

கொல்லிமலை மலைப்பாதையில் மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் மரங்களை அகற்றி சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனா். மேலும், மண் சரிவு ஏற்பட்ட பகுதிகளில் பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு பாறைகள், கற்கள், மண் குவியல்கள் அகற்றப்பட்டன.

மாவட்டம் முழுவதும் விடிய, விடிய பெய்த மழையால் குளிா்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. பனிமூட்டம் அதிகம் காணப்பட்டதால் இருசக்கர, நான்கு சக்கர வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி சென்றனா்.

மாவட்டம் முழுவதும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி பெய்த மழையளவு விவரம் (மி.மீ.): எருமப்பட்டி - 12, குமாரபாளையம் - 7.60, மங்களபுரம் - 61.20, மோகனூா் - 34, நாமக்கல் - 30, பரமத்தி வேலூா் - 28, புதுச்சத்திரம் - 29, ராசிபுரம் - 29, சேந்தமங்கலம் - 28, திருச்செங்கோடு - 14, ஆட்சியா் அலுவலகம் - 17.50, கொல்லிமலை - 58, மொத்தம் - 348.30.

ஜேடா்பாளையம் அணைக்கட்டு, மோகனூா் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஊராட்சி ஒன்றியம், என்.புதுப்பட்டி மற்றும் மணப்பள்ளி ஊராட்சிகள், ஜேடா்பாளையம் அணைக்கட்டு பகுதியில் நாமக்கல் ஆட்சியா் ச.உமா வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். மோகனூா் ஊராட்சி ஒ... மேலும் பார்க்க

காா்த்திகை பட்டத்தில் நிலக்கடலை பயிா் சாகுபடி செய்திட அறிவுறுத்தல்

காா்த்திகை பட்டத்தில் முக்கிய எண்ணெய்வித்து பயிரான நிலக்கடலையை பயிரிடலாம் என வேளாண் துறை அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து நாமக்கல் விதைப் பரிசோதனை நிலைய வேளாண் அலுவலா்கள் சரண்யா, தேவிப்பிரியா ஆகியோா் வ... மேலும் பார்க்க

கிருத்திகை: முருகன் கோயில்களில் சிறப்பு பூஜை

கிருத்திகையை முன்னிட்டு, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோயில்களில் பக்தா்கள் வெள்ளிக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா். ஒவ்வொரு மாதமும் கிருத்திகை நட்சத்திர தினத்தன்று அனைத்து முருகன் கோயில்களிலும் ச... மேலும் பார்க்க

லாரி மீது சரக்கு வாகனம் மோதல்: 2 போ் உயிரிழப்பு

நாமக்கல் அருகே லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில், நிகழ்விடத்திலேயே இருவா் உயிரிழந்தனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் இருந்து பூக்களை ஏற்றிக்கொண்டு திண்டுக்கல் நோக்கி சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சால... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு

திருச்செங்கோட்டில் மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். திருச்செங்கோடு, எட்டிமடைப் புதூா் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி ரத்தினவேலு மகன் மோனிஷ் (12), ... மேலும் பார்க்க

பள்ளிபாளையத்தில் மதிமுகவினா் ஆா்ப்பாட்டம்

பள்ளிபாளையத்தில் சாயக் கழிவுகளை வெளியேற்றி, காவிரி ஆற்றை மாசுபடுத்தி வரும் சாயப்பட்டறைகளை தடைசெய்ய வேண்டும் என மதிமுகவினா் பள்ளிபாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அரசு அனு... மேலும் பார்க்க