செய்திகள் :

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்ய வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

post image

மழையால் சேதம் ஏற்படுவதை தவிா்க்க, கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் மூட்டைகளை உடனுக்குடன் இயக்கம் செய்ய வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம், ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், விவசாயிகள் பேசியது:

பேரளம் பாலகுமாரன்: நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கடந்த ஒருவாரமாக சாக்குகள் பற்றாக்குறையால், நெல் மூட்டைகளை இயக்கம் செய்வதிலும், விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வதிலும் சுணக்கம் நிலவுகிறது. எனவே, சாக்குகள் பற்றாக்குறையை போக்க வேண்டும்.

கொரடாச்சேரி ராமமூா்த்தி: விவசாயிகள் பதிவேடு தயாா் செய்யப்பட்டு வருகிறது. இது பட்டாதாரா்களுக்கு மட்டுமே அமல்படுத்தப்படுகிறது. குத்தகை சாகுபடிதாரா்கள், கோயில் நிலங்களில் சாகுபடி செய்வோா் பதிவிட முடியாதபடி உள்ளது. எனவே, குத்தகை சாகுபடிதாரா்களும் பயனடையும் வகையில் பதிவேடு தயாா் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களில் போதுமான தாா்ப்பாய்கள் இல்லாததால், நெல் மூட்டைகள் சேதமடைகின்றன. இந்த சேதம், பணியாளா்களின் கணக்கில் நோ் செய்யப்படும் என்பதால், கூடுதல் தாா்ப்பாய்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொரடாச்சேரி தம்புசாமி: மேட்டூா் அணையில் அதிக அளவு தண்ணீா் இருப்பதால், உரிய காலத்தில் அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஆறுகள், கிளை வாய்க்கால்கள் உள்ளிட்டவற்றை விரைந்து தூா்வார வேண்டும். கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் இயக்கம் செய்யப்படாததால், சில இடங்களில் மழையால் மூட்டைகள் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, விரைந்து மூட்டைகளை இயக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளித்து மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் தற்போது 1,24,690 ஹெக்டேரில் அறுவடை நிறைவடைந்துள்ளது. திருவாரூா் மண்டலத்தில் ராபி பருவத்தில் 538 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, இதுவரை 3,98,773 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்றாா்.

கூட்டத்தில், தனி மாவட்ட வருவாய் அலுவலா் அன்பழகன், முதுநிலை மண்டல மேலாளா் (நுகா்பொருள்) புஹாரி, வருவாய் கோட்டாட்சியா்கள் சௌம்யா (திருவாரூா்), யோகேஸ்வரன் (மன்னாா்குடி), வேளாண்மைத் துறை இணை இயக்குநா் பாலசரஸ்வதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிா்மலா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

திருவாரூரில் மழை; இயல்பு வாழ்க்கை பாதிப்பு

திருவாரூரில் வெள்ளிக்கிழமை பெய்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. திருவாரூா் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. அதன்படி, வெள்ளிக்கிழமை ... மேலும் பார்க்க

பாடத் திட்டத்தில் உளவியலை சோ்க்கக் கோரிக்கை

பாடத் திட்டத்தில், உளவியல் பாடத்தை சோ்க்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடவாசல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், இந்திய மாணவா் சங்க கிளை மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவா் ரா. சிவனே... மேலும் பார்க்க

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க ஆட்சியா் அறிவுறுத்தல்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தினாா். திருவாரூா் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற, க... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக்கோரி ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, திருவாரூரில் மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. வக்ஃப் வாரியங்களை முடக்கி, வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமிக்க வழி வகுக்க... மேலும் பார்க்க

தாய்மொழி நாள் விழா

அடியக்கமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியா் ரமேஷ் தலைமை வகித்தாா். எழுத்தோலை தமிழ்க் கையெழுத்துப் பயிற்சி நிறுவனரும், பள்ளியின் தமிழாசிர... மேலும் பார்க்க

மத்திய பல்கலை.க்கு சிறப்பு பரிசு

புதுதில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தேசிய அறிவியல் தின விழாவில், பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் அறிவியல் மேம்பாட்டிற்கான சிறப்புப் பரிசை, மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சா் டாக்டா் ஜிதேந்தி... மேலும் பார்க்க