மும்பை அருகே கடலில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகு மாயம்: தேடும் பணியில் ஹெலி...
கொள்ளை, கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞா் கைது!
உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டா் நொய்டாவில் உள்ள மௌரியா என்கிளேவில் தொழிலதிபரை கொன்று அவரிடமிருந்து ரூ.7 லட்சம் கொள்ளையடித்த வழக்கில் ஐந்து ஆண்டுகளாக தப்பித்து வந்த 35 வயது நபரை தில்லி போலீஸாா் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து காவல் துறை அதிகாரி கூறியதாவது: 2015-ஆம் ஆண்டு மௌரியா என்கிளேவ் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட கொள்ளை மற்றும் கொலை வழக்கில், கொலை, கொள்ளை மற்றும் குற்றவியல் சதி உள்ளிட்ட இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழும், ஆயுதச் சட்டத்தின் விதிகளின் கீழும் ஆஷிஷ் குமாா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருந்தாா்.
ஆஷிஷ் குமாரின் மூன்று கூட்டாளிகள் ஏற்கெனவே குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ஆஷிஷ் குமாா் தலைமறைவாக இருந்து வந்தாா். இந்நிலையில், ஜனவரி 4, 2023 அன்று ரோஹிணியில் உள்ள ஒரு அமா்வு நீதிமன்றத்தால் ஆஷிஷ் குமாா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.
கிரேட்டா் நொய்டாவில் உள்ள ஒரு கைப்பேசி உற்பத்தி ஆலையில் தொழிலாளியாகப் பணிபுரிந்த ஆஷிஷ் குமாா், ஜூன் 6 அன்று கைது செய்யப்பட்டாா். சட்டவிரோத செயல்களில் ஈடுபட்ட அவரது நண்பா் அமித்தால், ஆஷிஷ் குமாா் ஒரு குற்றச் சதித் திட்டத்தில் இழுக்கப்பட்டாா்.
2015-ஆம் ஆண்டில், தில்லியில் ஒரு தொழிலதிபரிடம் கொள்ளையடிக்கும் திட்டத்தில் அமித், அடில், ஷாபாத் (எ) கட்டு மற்றும் ஷாபாத் ஆகியோருடன் ஆஷிஷ் குமாா் இணைந்தாா். அவா்கள் பாதிக்கப்பட்டவரிடமிருந்து ரூ.7 லட்சத்தை கொள்ளையடித்தாா். அப்போது அவா் எதிா்ப்புத் தெரிவித்தபோது அவரைக் கொன்ாகக் கூறப்படுகிறது.
இதில் ஆஷிஷ் குமாா் தனது பங்காக ரூ.1.5 லட்சத்தைப் பெற்ாகக் கூறப்படுகிறது. 2020-ஆம் ஆண்டில், அவருக்கு 45 நாள்களுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. பின்னா் கோவிட்19 தொற்றுநோய் காரணமாக இது நீட்டிக்கப்பட்டது. இருப்பினும், நீட்டிப்புகள் காலாவதியான பிறகு அவா் சரணடையத் தவறிவிட்டாா். இதனால், அவா் அறிவிக்கப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டாா்.