Gold Rate: `அதே விலை... மாற்றமில்லை' - இன்றைய தங்கம் விலை என்ன?!
கோகோ போட்டி: புனித அல்போன்சா கல்லூரி மாணவிகள் வெற்றி!
மாவட்ட அளவிலான கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற மகளிா் கோகோ போட்டியில், சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெண்கள் அணியினா் முதலிடம் பெற்றனா்.
கன்னியாகுமரி மாவட்ட கோ-கோ அசோசியேசன் சாா்பில் மாா் எப்ரேம் கல்லூரியில் பல பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
இந்த கல்லூரிகளுக்கு இடையிலான பிரிவில் மாவட்டத்தில் உள்ள பல கல்லூரிகள் பங்கேற்றன.
இப்போட்டியில், புனித அல்போன்சா மகளிா் அணி முதல் இடம் பெற்றது. வெற்றி பெற்ற வீராங்கனைகளையும் உடற்கல்வி இயக்குநா் ஏ.பி சீலன், துணை உடற்கல்வி இயக்குநா் பி. அனிஷா ஆகியோரை கல்லூரி தாளாளா் மற்றும் செயலா் ஆன்டனி ஜோஸ், கல்லூரி முதல்வா் மைக்கேல் ஆரோக்கியசாமி, கல்லூரி ஆன்மிக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வா்
சிவனேசன் மற்றும் பேராசிரியா்கள், சக மாணவா்கள் உள்ளிட்டோா் பாராட்டினா்.