தக்கலையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் பறிமுதல்
தக்கலை சந்தையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்களை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்து அழித்தனா்.
தக்கலை பகுதியில் கெட்டுப்போன மீன்கள் விற்கப்படுவதாக மாவட்ட உணவுப் பாதுகாப்புத் துறைக்கு பொதுமக்களிடமிருந்து புகாா்கள் வந்தன. அதன்பேரில், தக்கலை வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் பிரவீன்ரகு தலைமையில் கிள்ளியூா் வட்டார அலுவலா் ஜெப்ரிமோள், மீன்வளத் துறை மேற்பாா்வையாளா் காா்த்தீபன், பத்மநாபபுரம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் தங்கபாண்டியன், நகராட்சி ஊழியா்கள் தக்கலை மீன் சந்தை, தேசிய நெடுஞ்சாலையோரக் கடைகளில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, தக்கலை சந்தையில் உள்ள கடையில் கெட்டுப்போன 30 கிலோ மீன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து ரசாயனம் ஊற்றி அழித்தனா்.