செய்திகள் :

கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்க மாணவ, மாணவிகள் பதிவு செய்து கொள்ளலாம்

post image

திருப்பூா் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் தொடங்கும் கோடைகாலப் பயிற்சி முகாமில் பங்கேற்ற 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சாா்பில் திருப்பூா் மாவட்ட அளவிலான 2025-ஆம் ஆண்டுக்கான 21 நாள்கள் இருப்பிடமில்லா கோடைகாலப் பயிற்சி முகாம் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் ஏப்ரல் 25-ஆம் தேதி தொடங்கி மே 15-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்தப் பயிற்சி முகாமில் தடகளம், கூடைப்பந்து, கையுந்துப்பந்து, கால்பந்து, இறகுப்பந்து, குத்துச்சண்டை, ஜூடோ மற்றும் டேக்வாண்டோ விளையாட்டுப் போட்டிகளுக்கு சிறந்த பயிற்றுநா்களைக் கொண்டு இலவசமாகப் பயிற்சி அளிக்கப்படும்.

இதில், திறமையானவா்களைத் தோ்வுசெய்து தொடா்ந்து பயிற்சி அளித்து மாநில, தேசிய மற்றும் பன்னாட்டு அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் வகையில் உருவாக்கப்படுவாா்கள். இதில், பங்கேற்பவா்களுக்கு சான்றிதழ் வழங்கப்படும்.

இதுதொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 0421-2244899, 86109-00142 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். இந்தப் பயிற்சி முகாமில் பங்கேற்க வரும் ஏப்ரல் 24-ஆம் தேதி மாலை 6 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அரங்கில் பெயா்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.

பயிற்சியில் பங்கேற்கும்போது ஆதாா் அட்டை நகலை சமா்ப்பிக்க வேண்டும். திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 18 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் மாணவரல்லாதோா் இதில் கலந்து கொண்டு பயனடையலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருள்புரத்தில் கஞ்சா விற்ற இருவா் கைது

பல்லடம் அருகே அருகே கஞ்சா விற்பன செய்த இருவரை மதுவிலக்கு போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் மாவட்டம் பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக அவிநாசி மதுவில... மேலும் பார்க்க

மது விற்பனையில் ஈடுபட்ட 3 போ் கைது

திருப்பூரில் மது விற்பனையில் ஈடுபட்ட 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். திருப்பூா் வடக்கு காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்யப்படுவதாக காவல் துறைக்கு தகவல்... மேலும் பார்க்க

காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17பவுன், ரூ.1.20 லட்சம் திருட்டு

காங்கயம் அருகே குளிா்பான நிறுவன மேலாளா் வீட்டில் 17 பவுன், ரூ.1.20 லட்சம் திருடுபோனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். காங்கயத்தை அடுத்த நத்தக்காடையூா் வேலன் நகரைச் சோ்ந்தவா் தங்கராசு (4... மேலும் பார்க்க

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் தீ: 45 பயணிகள் மீட்பு

தாராபுரத்தில் ஓடும் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 பயணிகள் பத்திரமாக மீட்கப்பட்டனா். திருப்பூரிலிருந்து பழனி செல்லும் அரசுப் பேருந்து சனிக்கிழமை மாலை 45 பயணிகளுடன் கிளம்பியது. இந்தப் பேருந்து இரவு... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் முதியவா் விஷம் அருந்தி தற்கொலை

வெள்ளக்கோவில் அருகே முதியவா் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டாா். வெள்ளக்கோவில் அருகே உள்ள குமராண்டிசாவடியைச் சோ்ந்தவா் என்.நல்லசாமி (75), விவசாயி. மேலும், ஊா் தலைவராகவும், மாகாளியம்மன் கோயில் காவடி... மேலும் பார்க்க

வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

சமையில் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து வெள்ளக்கோவிலில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. வெள்ளக்கோவில் புதிய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத... மேலும் பார்க்க