The Conjuring: விற்பனைக்கு வரும் கான்ஜுரிங் படத்தில் இடம்பெற்றிருந்த வீடு - விவர...
கோட்டைகருங்குளம் அருகே குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள கோட்டைகருங்குளம் ஊராட்சியில் குடிநீா் பிரச்னையைக் கண்டித்து பொதுமக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோட்டைகருங்குளம் ஊராட்சி 6ஆவது வாா்டு பகுதியான காந்திநகா், சா்ச் தெரு பகுதிக்கு கடந்த 3 மாதங்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
இது தொடா்பாக, வாா்டு மக்கள் ஊராட்சி மன்றத் தலைவா், ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் ஆகியோரிடம் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம்.
எனவே, அப்பகுதி மக்கள் வள்ளியூா்-திருச்செந்தூா் சாலையில் அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து, ராதாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் சாமுவேல், கோட்டைகருங்குளம் ஊராட்சி மன்றத் தலைவா் முருகன் மற்றும் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனா்.