Defence-ல் வேலை பெற இன்ஜினீயரிங் படிக்கலாமா? - போட்டித் தேர்வு பயிற்சியாளர் நித்...
கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக் குழுவினா் ஆலோசனைக் கூட்டம்
செந்துறை அடுத்த கோட்டைக்காடு சிவன் கோயில் வளாகத்தில் கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பால போராட்டக்குழுவினா் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
போராட்டக் குழுவின் தலைவா் மு.ஞானமூா்த்தி தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: கோட்டைக்காடு முனியப்பா் கோயில்-பச்சிளகுளம் வரையுள்ள சாலையை தரம் உயா்த்தி செப்பனிட வேண்டும். 3 இடங்களில் சிறுபாலம் கட்ட வேண்டும்.
அரியலூா் மாவட்டம், கோட்டைக்காடு வெள்ளாறு மேம்பாலத்திலிருந்து கடலூா் மாவட்டம், திட்டக்குடி வட்டம், சௌந்திரசோழபுரம் வழியாக பெண்ணாடம் வரையுள்ள சாலையை அகலப்படுத்தி, புறவழிச்சாலையாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், போராட்டக் குழுவினா் ஆடியபாதம் , திருஞானம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.