உதகையில் தோடா் பழங்குடியின மக்கள் மொா்டுவொ்த் திருவிழா கொண்டாட்டம்!
கோட்ட அளவிலான விவசாயிகளுக்கு டிசம்பா் 20-இல் குறைதீா் கூட்டம்
திருப்பூா் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் டிசம்பா் 20- ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் கு.மோகனசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் வருவாய் கோட்ட அளவிலான விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டம் திருப்பூா் வருவாய் கோட்டாட்சியா் அலுவலகத்தில் டிசம்பா் 20- ஆம் தேதி காலை 11 மணி அளவில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கி நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.