செய்திகள் :

கோதுமை ரவை பிரியாணி, கருப்பட்டி அப்பம்; ‘அவள் கிச்சன்’ சீசன் 2 - ருசிகர சமையல் போட்டி

post image
திருநெல்வேலியில் நடைபெற்ற அவள் விகடன் மற்றும் சக்தி மசாலா இணைந்து வழங்கிய "சமையல் சூப்பர் ஸ்டார்" சீசன் 2 பெரும் கோலாகலத்துடன் நிறைவு பெற்றது. இந்த நிகழ்வில் திருநெல்வேலி, தென்காசி, மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பெண்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர்.

126 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த சமையல் போட்டியில், திருநெல்வேலியின் பாரம்பரிய உணவுகள் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டன. போட்டியாளர்கள் தங்கள் சமையல் திறனைப் படைத்துக் காட்ட வித்தியாசமாக பிளேட்டிங் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினர்.

பிரபல செஃப் தீனா நடுவராக இருந்து, உணவுகளை ருசிப்பதோடு மட்டுமல்லாது, போட்டியாளர்களின் முயற்சியைப் பாராட்டினார். "நான் பல இடங்களில் சமையல் போட்டிகளில் நடுவராக இருந்திருக்கிறேன், ஆனால் இங்கே சமையலின் தரம் மிகச் சிறப்பாக உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார். முதல் சுற்றில் 126 பேரில் இருந்து 20 பேர் இரண்டாம் சுற்றுக்குத் தேர்வாகினர்.

இரண்டாம் சுற்றில் பங்கேற்றவர்களுக்குப் பூண்டு களி, இடியாப்ப பிரியாணி, மீன் குழம்பு, பூசணிக்காய் அல்வா, மண்பானை சமையல் போன்ற பாரம்பரிய உணவுகளைச் சமைக்க வாய்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிறப்பாக செயல்பட்ட 10 போட்டியாளர்கள் நேரடி சமையலுக்கு தேர்வாகினர்.

இறுதிப் போட்டியில் ஒரு மணி நேரத்திற்குள் பங்கேற்பாளர்கள் ரவா பாயசம், பன்னீர் சூப், கோதுமை ரவை பிரியாணி, கருப்பட்டி அப்பம், சிக்கன் வறுத்து அறைச்ச கறி போன்ற உணவுகளைச் சமைத்துக் களமிறங்கினர்.

செஃப் தீனா சிறப்பாக சமையல் செய்த ஸ்ரீமதி, சயீத் அலி பாத்திமா, ஷெரின் லத்தீப் ஆகிய மூவரை வெற்றியாளர்களாகத் தேர்வு செய்தார். இறுதிச் சுற்றில் பங்கேற்ற 10 போட்டியாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

Apple: ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் ஆப்பிள்கள்தான் தரமானதா? அதிக விலைக்கு வாங்கும் மக்கள்; உண்மை என்ன?

பொதுவாக பழக்கடைகளில் அல்லது சந்தைகளில் ஆப்பிள் அல்லது சில பழங்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஸ்டிக்கர் ஒட்டப்பட்ட ஆப்பிள்கள் தான் தரம் வாய்ந்தது என்று எண்ணி அதனை மக்கள் அதிக... மேலும் பார்க்க

Food & Health: நாம் அடிக்கடி சாப்பிட வேண்டிய 10 உணவுகள்!

ஓமவல்லிப் பச்சடி கற்பூரவல்லிதேவையானவை: ஓமவல்லி (அல்லது) கற்பூரவல்லி இலை - கைப்பிடி அளவு, இஞ்சி - சிறு துண்டு, பச்சை மிளகாய் - 1, மிளகு - 5, சீரகம், பெருங்காயம், உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன், தே... மேலும் பார்க்க

விழுப்புரம்: அரங்கத்தை கட்டிப் போட்ட மணம்! - சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தேர்வான 3 அரசிகள்

பெண்களின் முன்னேற்றத்திற்கு உற்ற துணையாக, வழியாட்டியாக இருக்கும் அவள் விகடன், அவர்களை திறமைகளை வளர்த்துக்கொள்வதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது சக்தி மசாலாவுடன் இண... மேலும் பார்க்க

சங்குப் பூ துவையல், பனை ஓலை கொழுக்கட்டை...விழுப்புரத்தில் களைகட்டிய சமையல் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சி!

முதல் போட்டி மதுரையிலும், இரண்டாவது போட்டி தஞ்சாவூரிலும், மூன்றாவது போட்டி திருச்சியிலும், நான்காவது போட்டி ராமநாதபுரத்திலும், ஐந்தாவது போட்டி காரைக்குடியிலும் நடைபெற்ற நிலையில் ஆறாவது போட்டி விழுப்பு... மேலும் பார்க்க

Fake vs Real: போலி பாதாமை கண்டறிவது எப்படி?

தரக் குறைவான பாதாம் அல்லது பாதாமே இல்லாத ஆப்ரிகார்ட், பீச் விதகைகளை சாயம் பூசி பாதாம் என விற்பனை செய்வது பெருகி வருகிறது.தரமான பாதம்களிலிருந்து இவற்றைக் கண்டறிவதற்கு சில வழிமுறைகள் இருக்கின்றன.வடிவம்த... மேலும் பார்க்க

ராமநாதபுரம்: சமையல் சூப்பர் ஸ்டார் சீஸன்-2 கோலாகலம்; இறுதிப்போட்டிக்குத் தேர்வான நளபாக வித்தகர்கள்!

மாநிலத்தின் நீண்ட கடல் பரப்பைக் கொண்டதும், எண்ணிலடங்கா கடல் வாழ் உயிரினங்கள் வாழும் பகுதியாகத் திகழும் மன்னார் வளைகுடா பகுதியினைத் தன்னுள்ளே கொண்டிருக்கும் ராமநாதபுரத்தில் இன்று நடந்த சமையல் சூப்பர் ஸ... மேலும் பார்க்க