கோபியில் ரூ.8.50 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம்
கோபி வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 8.50 லட்சத்துக்கு வாழைத்தாா் ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
ஏலத்துக்கு கோபி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து 4,180 வாழைத்தாா்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில், கதளி கிலோ ரூ.34, நேந்திரம் கிலோ ரூ. 55, பூவன் தாா் ஒன்று ரூ.560, தேன்வாழை தாா் ஒன்று ரூ.610, செவ்வாழைதாா் ஒன்று ரூ.1,210, ரஸ்தாளி தாா் ரூ. 620, பச்சநாடன் தாா் ரூ. 480, ரொபஸ்டா தாா் ரூ.420, மொந்தன் தாா் ரூ.400 என விற்பனையானது. மொத்தம் ரூ.8 லட்சத்து 50 ஆயிரத்துக்கு விற்பனை நடைபெற்றது.