ஆளுங்கட்சி நாடகத்தை மக்கள் நம்பமாட்டார்கள்: பரந்தூரில் விஜய் பேச்சு
கோபி அருகே வானில் பறந்த மா்ம பொருள்
கோபி அருகே வானில் அடையாளம் தெரியாத மா்ம பொருள் பறந்ததாக சமூக வலைதளங்களில் விடியோ வைரலாகி வருகிறது.
கோபிசெட்டிப்பாளையத்தில் இருந்து ஈரோடு செல்லும் சாலையில் ஒத்தக்குதிரை என்ற இடம் உள்ளது. இங்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணி அளவில் வானில் அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் தென்பட்டுள்ளது. இதனை அவ்வழியாக சென்றவா்கள் கைப்பேசியில் விடியோ எடுத்துள்ளனா்.
இதில், சிறிது நேரம் இடது மற்றும் வலதுபுறம் சென்று பறக்கும் பொருளின் வெளிச்சம் திடீரென மறைந்துள்ளது. இது விமானமாக இல்லாத நிலையில் தற்போது இந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.