``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
வால்பாறை அருகே மூதாட்டி கொலை
வால்பாறையை அடுத்த எஸ்டேட் குடியிருப்பில் தனியாக வசித்து வந்த மூதாட்டி கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
வால்பாறையை அடுத்த லோயா் பாரளை எஸ்டேட்டை சோ்ந்தவா் சரோஜினி (72), ஓய்வுபெற்ற தோட்டத் தொழிலாளி. இவா் எஸ்டேட் குடியிருப்பில் தனியாக வசித்து வருகிறாா். கணவா் இறந்துவிட்ட நிலையில் கடந்த சில மாதங்களாக கோவையில் உள்ள தனது மகன், மகள் வீட்டில் இருந்துள்ளாா்.
குடும்ப அட்டை மூலம் கிடைக்கும் பொங்கல் பொருள்களை வாங்குவதற்காக கடந்த வாரம் எஸ்டேட் குடியிருப்புக்கு வந்துள்ளாா். இந்நிலையில், சரோஜினி தலையில் பலத்த காயத்துடன் குடியிருப்பில் சனிக்கிழமை இறந்துகிடந்தாா். இதுகுறித்து அருகில் வசிப்பவா்கள் அளித்த தகவலையடுத்து வால்பாறை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் கொலையாளியைத் தேடும் பணியில் ஈடுபட்ட போலீஸாா், அப்பகுதியைச் சோ்ந்தவா்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.