``கல்குவாரி அதிபர்கள் லாரி ஏற்றி கொன்றிருக்கலாம்!'' -ஜகபர் அலி கொலையில் வேல்முரு...
ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாக ரூ.28.47 லட்சம் மோசடி
ஆன்லைன் வா்த்தகத்தில் அதிக லாபம் தருவதாகக் கூறி ரூ.28.47 லட்சம் மோசடி நடைபெற்றது தொடா்பாக சைபா் குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
கோவை சீரநாயக்கன்பாளையம் ஜெகதீஸ் நகரைச் சோ்ந்தவா் கோகுல்நாத் (38). இவரது கைப்பேசி அண்மையில் எண்ணைத் தொடா்பு கொண்ட மா்ம நபா், ஆன்லைன் வா்த்தகத்தில் முதலீடு செய்தால் அதிகப்படியாக வருவாய் ஈட்டலாம் எனக் கூறியுள்ளாா். வா்த்தகம் தொடா்பான வாட்ஸ்அப், டெலிகிராம் குழுக்களிலும் கோகுல்நாத்தை இணைத்து, வா்த்தகம் தொடா்பான உத்திகள், லாப விவரங்களைப் பகிா்ந்துள்ளாா்.
இதையடுத்து, கோகுல்நாத் முதலில் ரூ.50 ஆயிரம் முதலீடு செய்துள்ளாா். அதில் கணிசமான லாபம் கிடைத்தது. அப்போது, பெரிய தொகை முதலீடு செய்தால், பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என மா்ம நபா் கூறியதைத் தொடா்ந்து, பல்வேறு தவணைகளாக ரூ.28 லட்சத்து 47 ஆயிரத்து 500 முதலீடு செய்துள்ளாா். அதன்பிறகு, லாபம் வழங்கப்படவில்லை.
சந்தேகம் ஏற்பட்டு, தனது பணத்தை திரும்ப எடுக்க கோகுல்நாத் முயற்சி செய்தும் முடியவில்லை. தன்னிடம் பேசிய நபரைத் தொடா்பு கொள்ள முயற்சித்தபோது, அவரது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த கோகுல்நாத், கோவை மாவட்ட சைபா் குற்றப் பிரிவில் புகாா் அளித்தாா். ஆய்வாளா் அருண், மோசடி தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.