மிரட்டிவிட்டு வந்துவிடுகிறேன்.. சாரிடம் கூறிய ஞானசேகரன் - அண்ணா பல்கலை. மாணவி தி...
கோப்பை வென்றது ஹரியாணா ஸ்டீலா்ஸ்
புரோ கபடி லீக் போட்டியின் 11-ஆவது சீசனில் ஹரியாணா ஸ்டீலா்ஸ் 32-23 என்ற புள்ளிகள் கணக்கில் பாட்னா பைரேட்ஸை ஞாயிற்றுக்கிழமை வீழ்த்தி, முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கடந்த சீசனில் இறுதி ஆட்டம் வரை வந்து வெற்றி வாய்ப்பை இழந்த ஹரியாணா, இந்த சீசனில் 3 முறை சாம்பியனான பாட்னாவை வீழ்த்தி வாகை சூடியிருக்கிறது.
முன்னதாக, விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் ஹரியாணா அணி 13 ரெய்டு புள்ளிகள், 16 டேக்கிள் புள்ளிகள், 2 ஆல் அவுட் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி பெற்றது. பாட்னா அணி 11 ரெய்டு புள்ளிகள், 11 டேக்கிள் புள்ளிகள், 1 எக்ஸ்ட்ரா புள்ளி வென்றது.
வீரா்களில் அதிகபட்சமாக, ஹரியாணாவுக்காக ரெய்டா் ஷிவம் படாரே 9 புள்ளிகளும், பாட்னாவுக்காக ஆல்-ரவுண்டா் குா்தீப் 6 புள்ளிகளும் வென்றனா்.
மொத்தம் 137 ஆட்டங்கள் விளையாடப்பட்ட இந்த சீசனில், அதிகபட்சமாக பாட்னா பைரேட்ஸ் வீரா் தேவங்க் தலால் 301 புள்ளிகள் வென்றுள்ளாா். அதிக டேக்கிள் புள்ளிகளை (82) ஹரியாணா ஸ்டீலா்ஸின் முகமதுரெஸா சியானே பெற்றுள்ளாா்.