Health: பாடி பாசிட்டிவிட்டி, பாடி நியூட்ராலிட்டி இரண்டில் எது சிறந்தது?
கோயில்களில் திருவிழா காலங்களில் தரிசனக் கட்டண ரத்து அறிவிப்பு: இந்து முன்னணி வரவேற்பு
மயிலாப்பூா், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்பை இந்து முன்னணி வரவேற்றுள்ளது.
இதுகுறித்து இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
மயிலாப்பூா், பழனி, ஸ்ரீரங்கம் உள்ளிட்ட 10 கோயில்களில் திருவிழாக்காலங்களில் மட்டும் தரிசனக் கட்டணம் ரத்து செய்யப்படுவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் அறிவித்துள்ளதை இந்து முன்னணி வரவேற்கிறது. அதே சமயத்தில் அனைத்து கோயில்களிலும் எல்லா நாள்களிலும் தரிசனக் கட்டணத்தை ரத்து செய்யவேண்டும்.
கைலாஷ் மானசரோவா் யாத்திரைக்கு ஆண்டுக்கு 500 பேருக்கு தலா ரூ.1 லட்சம் மானியம் வழங்குவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆனால், இந்தத் தொகை அறநிலையத் துறை நிதியில் இருந்து வழங்கப்படுவது ஏற்புடையதல்ல.
பாடசாலை மற்றும் கல்லூரி நடத்துவது அரசின் கடமை. ஆனால், தற்போது செவிலியா் கல்லூரி முதல் தொழில்பயிற்சி நிறுவனங்கள் வரை கோயில் நிலங்களில், கோயில் நிதியில் நடத்தப்படும் என்று அமைச்சா் அறிவித்திருப்பது கோயில் சொத்தை, நிதியை மடைமாற்றும் செயலாகும்.
கோயில் நிலங்கள் மற்றும் நிதியை முறைகேடாக கல்வி நிறுவனங்கள் நடத்த பயன்படுத்தக் கூடாது. அரசின் அறிவிப்புக்கள் வெற்று அறிவிப்புகளாக இல்லாமல் திட்டங்களை செயல்படுத்தும் வகையில் இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.