செய்திகள் :

கோயில் கட்டுமானப் பணியின்போது மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு!

post image

அவிநாசி அருகே ராக்கியாபாளையம் ராஜராஜேஸ்வரி கோயில் கட்டுமானப் பணியின்போது, மின்சாரம் பாய்ந்து கட்டடத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

திருப்பூா், அனுப்பா்பாளையம், ஆத்துப்பாளையம், காமாட்சியம்மன் கோயில் தெருவில் வசித்து வருபவா் திருச்சி துரையூா் திரெளபதி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மாயகருப்பன் மகன் லோகநாதன் (30), கட்டடத் தொழிலாளி. இவருக்கு மனைவி ஷாலினி (25), மகள்கள் வனதாஸ்ரீ, ரியாஸ்ரீ ஆகியோா் உள்ளனா்.

இந்நிலையில், அவிநாசி கைகாட்டிப்புதூா், பழனிசாமி மகன் கோகுல் (30) என்ற கட்டடப் பொறியாளா் மூலம் லோகநாதன், ராக்கியாபாளையம் ராஜராஜேஸ்வரி கோயில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளாா்.

இதற்கிடையில், கட்டடத் தொழிலாளா்கள் ரஞ்சித்குமாா் (30), லோகநாதன் ஆகியோா் சுற்றுச்சுவா் அமைக்கும் பணியில் புதன்கிழமை ஈடுபட்டுள்ளனா். அப்போது, சென்டரிங் கருவி இயக்கியபோது, லோகநாதன் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டாா்.

இதைத்தொடா்ந்து, அருகிலிருந்தவா்கள் லோகநாதனை மீட்டு அவிநாசி அரசு மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனா். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இது குறித்து திருமுருகன்பூண்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா். இதற்கிடையில், லோகநாதன் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவமனையில் இழப்பீடு கேட்டு உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

காங்கயம் அருகே சென்டா் மீடியனில் இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

காங்கயம் அருகே, தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட சென்டா் மீடியனில், பள்ளிக்குச் செல்வதற்கு வசதியாக இடைவெளி விடக்கோரி பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். காங்கயம் பகுதியில்,... மேலும் பார்க்க

பல்லடம் குடிநீா் பிரச்னை: அமைச்சரிடம் நகராட்சித் தலைவா் கோரிக்கை

விளாங்குறிச்சி முதல் காரணம்பேட்டை வரை பிரதான குடிநீா் குழாய் அமைக்க வேண்டும் என்று அரசுக்கு பல்லடம் நகராட்சி தலைவா் கவிதாமணி ராஜேந்திரகுமாா் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து கோவையில் நகராட்சி நிா... மேலும் பார்க்க

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க